திருச்சி அரசு அருங்காட்சியம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி!

திருச்சி அரசு அருங்காட்சியம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி!

அருங்காட்சியங்கள் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளன. அந்த வகையில் திருச்சி அரசு அருங்காட்சியகம் சார்பில் நவம்பர் திங்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப் போட்டியை ஆன்லைனில் நடத்தப்பட உள்ளனர்.

Advertisement

இதில் திருச்சி மாவட்ட பள்ளிக் குழந்தைகள் மட்டும் பங்கேற்கலாம். 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு "இயற்கை பாதுகாப்பு - பறவை மற்றும் விலங்குகள்" என்னும் தலைப்பிலும், 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு "சுற்றுச்சூழல் மாசுபாடு, தொன்மைப் பாதுகாப்பு, தேசப்பற்று ஓவியங்கள்" என்னும் தலைப்பில் ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பங்குபெறும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இ- சான்றிதழும், முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளனர். இந்த ஓவியங்களை வருகின்ற 30ம் தேதிக்குள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்: 9843616986

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm