துப்பாக்கி சூடும் போட்டி - வெண்கலம் பதக்கம் வென்ற திருச்சி மாணவி

துப்பாக்கி சூடும் போட்டி - வெண்கலம் பதக்கம் வென்ற திருச்சி மாணவி

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி (15.04.2023) மற்றும் (16.04.2023) ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.

இந்த போட்டியில் திருச்சி மாநகரத்தை சேர்ந்த பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டியாளர் கலந்து கொண்டார்கள். இப்போட்டி சிறியவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.

இப்போட்டியில் பீப் சைட் பிரிவில் கலந்துக் கொண்ட S.வைஷ்ணி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு தமிழ்நாடு ரைபிள் கிளப் செயலாளர் வேல்சாமி பதக்கங்களை வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn