திருச்சியை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித்திற்கு "INSPIRING YOUTH ICON OF TAMILNADU" விருது

Mar 31, 2022 - 04:05
Mar 31, 2022 - 05:27
 446
திருச்சியை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித்திற்கு "INSPIRING YOUTH ICON OF TAMILNADU" விருது

திருச்சியை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித்திற்கு "INSPIRING YOUTH ICON OF TAMIL NADU " விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. மார்ச் 29 2022 அன்று டாப்நோட்ச் பவுண்டேஷன், அவுட் லுக் வார இதழ், இந்தியா நியூஸ் நிறுவனம் இணைந்து, இந்தியாவில் உள்ள பல துறைகளில் சாதனை புரிந்த 70 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நடத்தியது. இவ்விழாவிற்கு மத்திய அமைச்சர்கள் கிஷான் ரெட்டி, ராம்தாஸ் அத்வாலே, பகன் சிங் குலஸ்தே, ஜான் பர்லா, மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் சாகர் மற்றும் நடிகர் சுன்கி பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.

இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த இளம் கவிஞர் ஜோசன் ரஞ்சித் அவர்களுக்கு "INSPIRING YOUTH ICON OF TAMIL NADU" விருது வழங்கப்பட்டது. இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் தமிழகம் சார்பில் இவர் ஒருவருக்கு தான் விருது வழங்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. இவரை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என‌ அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். கவிஞர் ஜோசன் ரஞ்சித்  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை பற்றி" அன்பு உடன்பிறப்பே" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.

இதுவரை இவர் 4 தமிழ் கவிதை நூல்களையும் 3 ஆங்கில நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் 140 நாடுகளில் அமேசான், பிளிப்கார்ட் மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது! மேலும் இவர் உலக மனித உரிமைகள் ஆணையத்தின் நிரந்தர சர்வதேச உறுப்பினராக பணியாற்றி வருகிறார் தனிப்பட்ட முறையில் பல சமூக அமைப்புகளோடு இணைந்து சமூக தொண்டுகளை செய்து வருகிறார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO