சமூக சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திருச்சி இளைஞர்

சமூக சேவைக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திருச்சி இளைஞர்

திருச்சி கைலாஷ் நகரைச் சேர்ந்த சக்தி பிரசாத் 2014 முதல் மக்களுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக மனித உரிமை மீறல் லஞ்ச ஒழிப்பு போன்றவற்றில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். தேசிய மனித உரிமை அமைப்பின் கீழ் செயல்படும் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவில் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளார்.

திருச்சி மாவட்ட செயலாளராக தொடங்கி தற்போது மாநில பொது செயலாளராக செயல்பட்டு வருகிறார். ஊழல் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு   நிகழ்ச்சிகள் நடத்துவது, மக்களுக்கு உதவும் வகையில் இரத்த தானம், கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி, மரக்கன்றுகள் நடுதல் இப்படி பல்வேறு வகையில் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

இளம் வயதில் மக்களுக்காக சமூக அக்கறையோடு 7 ஆண்டுகளாக சேவை செய்து வரும் சக்தி பிரசாத்யை கௌரவிக்கும் வகையில் கடந்த (23.10.2021) சனிக்கிழமை பாண்டிச்சேரியில் குளோபல் ஹூமன் பீஸ் பல்கலைக் கழகம் சார்பாக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சக்தி பிரசாத் கூறுகையில்... மக்களுக்கு  ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து செய்பட்டு வருகிறேன். இன்றைக்கும் பலர் தங்களுடைய உரிமைகளையும் தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக போராடுவதற்கு தயங்குகின்றனர். அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று இச்சேவை தொடங்கினேன். இந்த கௌரவ டாக்டர் பட்டம் என்னை இன்னும் அதிகமாய் ஊக்கப்படுத்தி சமூகத்திற்கான சேவை செய்வதற்கான நம்பிக்கை அளித்துள்ளது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn