குழந்தைகளை கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும்-ஜெயஸ்ரீ ராஜு ஸ்ரீராம்
இன்றைய காலப் பெற்றோர்களுக்கு குழந்தைகளை கையாளுவது என்பது சற்றே சவாலான விஷயமாக இருக்கிறது பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்வதால் குழந்தைகளை ஏதேனும் ஒரு தொடுதிரையோடு இருக்கும் சூழலை உருவாக்கியுள்ளனர். ஆனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் என்பது அவர்கள் அன்றைய கால குழந்தைகளை போல ஓடியாடி விளையாடுவதில் தான் இருக்கின்றது. இது அவர்களின் உடலுக்கு மட்டும் இன்றி மனதிற்கு மிக சிறந்த பயிற்சியாகும் அதனால் தொடங்கப்பட்டது தான் திருச்சியின் முதல் இண்டோர் ப்ளே சென்டர் Bouncy House.
குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும் பொழுது நாமும் குழந்தையாக மாறலாம் என்று குழந்தை தனத்தோடு பேச ஆரம்பித்தார் ஜெய்ஸ்ரீ ராஜு ஸ்ரீராம் .. சிறுவயதில் இருந்தே எனக்கு கல்வி என்றால் மிகவும் பிடிக்கும் என்னுடைய இளமை காலம் வறுமைக்குள் தான் இருந்தது. ஆனால் கல்வியால் அதனை வெல்லலாம் கல்வியின் மீது அதிகம் நாட்டம் ஏற்பட்டு என்ற சிறந்த கல்வியாளராக இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு என்னுடைய கணவரின் எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் நிறுவனம் GCT பார்ட்னராக பணிபுரியை தொடங்கினேன். https://www.githacorporation.com என் திறமைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் அது.
தொடர்ந்து என்னுடைய கல்வியும் பெற்றுக்கொண்ட அனுபவம் எனக்கு உதவதொடங்கியது. நாம் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்றுக் கொடுப்பதில் தான் அறிவு வளரும் என்பார்கள். அது போல் கல்வியாளராக இருப்பதற்கு மிக முக்கிய காரணமே. நாம் நம்மால் முடிந்த வரை பிறருக்கு கல்வி கற்றுக் கொடுப்பதுதான் அந்த வகையில் உருவாக்கப்பட்டது தான் My Learning Center. வருடத்திற்கு எட்டு முதல் 10 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான அனைத்து கல்வி உதவிகளையும் கல்வி பயிற்சி அளித்து வருகிறேன். முடிந்தவரை மாணவர்களின் வெற்றியை கல்வியால் மட்டுமே பெற முடியும் என்பதை அவர்களுக்கு உணர செய்ய வேண்டும் அதோடு மட்டுமில்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி மட்டுமே உதவும் என்பதும் இல்லை நாம் பெற்றுக் கொள்ளும் அனுபவம் மிக முக்கியமானது அதற்கு நம் வாழ்வை மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இது குறித்து புரிதல் முதலில் பெற்றோர்களுக்கு வர வேண்டும் எனவே தான் பெற்றோர்களுக்கும் ஆலோசகராக இருந்து வருகிறேன். பெற்றோர்கள் குழந்தைகள் என்று என்னுடைய பயணம் தொடர்தது அப்போதுதான் புரிந்தது இன்றைய கால குழந்தைகளின் விளையாட்டு அவர்களுடைய சமூக உரையாடல் என்பதும் குறைந்துவிட்டதை உணர்ந்தேன். அதற்காக திருச்சியில் இன்டோர் பிளே சென்டர் தொடங்கியுள்ளோம். திருச்சி நல்லி சில்க்ஸ் அருகே உள்ள ப்ளே சென்டரில் தினந்தோறும் குழந்தைகள் விளையாடுவதை பார்க்க மனதில் அலாதியான இன்பம் உண்டாகும் ..தங்கள் குழந்தைகளை பூட்டி வைக்க பெற்றோர்கள் விரும்புவதில்லை இன்றைய கால சூழல் அவர்களை அப்படி உருவாக்கியுள்ளது. ஆனால் இதுபோன்று அவர்கள் விளையாடுவதை பார்க்கும் பொழுது பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்த நிறுவனத்தில் மற்றும் ஒரு சிறப்பு பல பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளோம். வேலை பார்த்துக்கொண்டே படிக்க விரும்பும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். வறுமையை வெல்ல இங்கு பல கருவிகள் நம்மிடமே இருக்கின்றது நாம் தான் அதை சரியாக புரிந்து கொள்வதில்லை நம்முடைய திறமையையும் நம்முடைய தனித்தன்மையையும் உலகிற்கு பறைசாற்றுவதற்கு நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியமானது அதை என் அனுபவத்தில் உணர்ந்தேன் என்றார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision