ஆறுநூறு கிராம் குழந்தையும் ஆளப்பிறந்தவராக்கும்  திருச்சி அரசு மருத்துவமனை

ஆறுநூறு கிராம் குழந்தையும் ஆளப்பிறந்தவராக்கும்  திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவப் பிரிவு மூன்று வருடங்களாக சிறந்த செயல்பாடு காண விருதை தட்டிச் சென்றுள்ளது. அப்படி என்ன தொடர்ந்து விருது பெறும் அளவிற்க்கு செயல்பாடு உள்ளது என்று களத்தில் இறங்கிய போது .... அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தலைமையிலான குழுவினர் சிறப்பாக குழந்தைகளைக் நிமிடத்திற்க்கு நிமிடம் கவனித்து வருகின்றனர்.

ஒன்றை கிலோவுக்கு குறைவாக 450, 500 ,600 கிராம் உள்ள பச்சிளம் குழந்தைகளை கவனிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர் .ஒரே சமயத்தில் 25 குழந்தைகளை சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வென்டிலேட்டர் மற்றும் அதிநவீன கருவிகள் அனைத்தும் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளது . அதுமட்டுமில்லாமல் மஞ்சள் காமலை, வலிப்பு நோய் ,ரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட பிரிவுகளும் பச்சிளம் குழந்தைகளுக்கு  செயல்பட்டு வருகிறது. 

கடந்த 2021 ஜூன் மாதத்தில் 1036 கர்ப்பிணிகளுக்கு  பிரசவம் நடைபெற்று உள்ளது .ஒரு குழந்தைக்கும் ஒரு தாய்க்கும் கூட கோவிட் தொற்று இல்லாத நிலையில் சிறப்பான சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த வருடம் கோவிட் தொற்று முதல் அலையும் போது 500க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கும் 10 பச்சிளம் குழந்தைகளுக்கு மட்டுமே கோவிட் தொற்று ஏற்பட்டது. தாய்மார்களும் குழந்தைகளும் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினர். 

மேலும் 600 கிராமில் பிறந்த குழந்தையை தடுப்பூசி போட வரும் பொழுது 3 கிலோ 4 கிலோ என அந்த குழந்தையை பார்க்கும்பொழுது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக திருச்சி அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தெரிவிக்கிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I