23 ஆண்டுகளாக வாழ்த்தும் பணியை வைராக்கியமாக தொடரும் காவல் அதிகாரி

23 ஆண்டுகளாக வாழ்த்தும் பணியை வைராக்கியமாக தொடரும் காவல் அதிகாரி

2000ஆண்டு முதலில் வாழ்த்து மடல்களை அனுப்பும் பொழுது அப்பொழுது பிரிண்ட் செய்து தபால் உறைக்குள் வைத்து அனுப்ப துவங்கி 15 பைசா தபால் தலையுடன் அதன் பிறகு வாழ்த்து காடுகளை வைத்து வாங்கி அனுப்ப துவங்கினேன். சட்டம் - ஒழுங்கை காக்கும் பணியிலிருந்தும் தஞ்சை தரணியில் பிறந்ததால் இயற்கை காத்து வாழ்ந்தாக வேண்டும் என்பதை காவல் பணியுடன் பரப்புரை செய்யும் வாத்தியார் மகன் டி.எஸ்.பி பிராபாகரன்.

இளமை காலத்தில் என் நண்பர்கள் முக்கிய பண்டிகை உள்ளிட்ட நாட்களில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியும் தனக்கு எவ்வளவு வாழ்த்து மடல்கள் வந்தது என பேசி மகிழ்ந்த காலம். அந்த இடத்தில் தொடங்கிய இந்த 23 ஆண்டு கால வாழ்த்து பயணம் எழுத்துகளிலிருந்து, வாழ்த்து அட்டைகள், தற்பொழுது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் டிஜிட்டல் கார்டுகளாக வாழ்த்துகள் அன்பையும் ஒவ்வொரு கருப்பொருளை வைத்து அனுப்பி வருகிறேன். 23 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விதமான கருப்பொருளை வைத்து அனுப்பி வருகிறேன்.

ஆரம்ப காலத்தில் வாழ்த்து மடல்களில் செய்திகளை குறிப்பிட்டு அனுப்பி வந்தேன். 2000ம் ஆண்டு முதல் ஒவ்வொரு விதமான கருப்பொருளை வைத்து அனுப்பினேன். பாலக்கரை காவல் நிலையத்தில் பணிபுரியும் பொழுது அதனை சுற்றியுள்ள நத்தர்ஷா பள்ளிவாசல், மலைக்கோட்டை உள்ளிட்ட மாநகரின் வரலாற்று சின்னங்களை வாழ்த்து மடல்களில் அனுப்பினேன். அங்கிருந்து பணிமாறுதலாகி கன்னியாகுமரி குளச்சல் பகுதியில் பணியாற்றிய பொழுது விவேகானந்தர் பாறை அப்பகுதிகளிலுள்ள முக்கிய இடங்கள் வாழ்த்து செய்திகளில் புகைப்படங்களாக இடம் பெற்றது. பின்னர் சங்கரன்கோவில் பணியாற்றிய பொழுது குற்றாலத்தின் இயற்கை சூழல் புகைப்படங்களை காட்சி ப்படுத்தி அனுப்பினேன்.

அதன் பிறகு திருச்சிக்கு மீண்டும் வந்த பிறகு 2017ல் பணியில் இருக்கும் பொழுது விபத்தை சந்தித்ததால் அப்பொழுது தன்னம்பிக்கை மன உறுதி அடங்கிய புகைப்படங்களை வாழ்த்து மடல்களாக வைத்து டிஜிட்டல் பிரிண்ட் வாழ்த்து அட்டைகளை அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி என் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொண்டேன். 

திருச்சி மின்சார வாரிய லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய பொழுது பண்டைய கால விளையாட்டுகளை முன்னிறுத்தி டிஜிட்டல் வாழ்த்து அட்டைகளையும், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படங்களையும் தொகுத்து வாழ்த்து தெரிவித்தேன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை புகைப்படங்களை சேகரித்து கடந்த வருடம் வயல் சார்ந்த இடங்களை புகைப்படங்களாக வாழ்த்து மடலில் இடம்பெற செய்தேன். இந்த வருடம் மருதம் தொடர்பான மலையும், மலை சார்ந்த இடங்களில் இயற்கையான மலைப்பிரதேசத்தில் உள்ள மரங்களை குறித்து 8 விதவிதமான புகைப்படங்களை தொகுத்து இந்த வருடம் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை அனுப்பி உள்ளேன்.

23 ஆண்டுகளாக புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வதை மிக முக்கியமான சந்தோஷமான பணியாக செய்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 500-க்கும் மேற்பட்டவர்களுக்கும் காவல்துறையில் ஒவ்வொரு பிரிவில் பணியாற்றிய பொழுது உள்ள உயரதிகாரிகள், நண்பர்கள் அனைவருக்கும் தபால் அனுப்பும் வசதியை நிறுத்தும் வரை எனது கருப்பொருள் மையமாக வைத்து வாழ்த்தும் பணியை நிறுத்த மாட்டேன் என மன உறுதியுடன் உள்ளார்.

காவல்துறையில் பணியில் சேர்ந்து 26 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்றைய நவீன உலகத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் மூலம் வாழ்த்துகளை தெரிவிக்கும் நிலையில், மனதை வருடும் கருப்பொருளை அனுப்பி அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இவருக்கு நன்றியுடன் வாழ்த்து பணி தொடரட்டும் வாழ்த்துவோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision