3 மெகாவாட் மின் உற்பத்தி என சாதனை மேல் சாதிக்கும் விமான நிலையம்.

3 மெகாவாட் மின் உற்பத்தி என சாதனை மேல் சாதிக்கும் விமான நிலையம்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2வது முனையம் கட்டுவதற்காக இந்திய வி்மான நிலைய ஆணையக் குழுமத்தால் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் ஒரு வழியாக 5 ஆண்டுகள் கழித்து இப்போது பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த 2வது முனையமானது 2 அடுக்குகளைக் கொண்டதாக திகழ்கிறது. இதில் ஒரே நேரத்தில் உள்நாடு, வெளிநாடு என மொத்தமாக சேர்த்து 6,000 பயணிகளை கையாள முடியும் என்பது கூடுதல் தகவலாகும். விமான நிலைய ஆணை குழுமம் முன்மாதிரியான கட்டிடத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டத்தை உருவாக்கியது. லண்டனை சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் பாஸ்கல் வாட்சன் விமான நிலையத்திற்கான கட்டிட வடிவமைப்பு உருவாக்கினார். இந்தியாவில் இவர்களுக்கு இதுவே முதல் திட்டம் ஆகும். எனவே இதை சிறந்த முறையில் செய்து முடிக்க வேண்டும் என்று பல முன்னெடுப்புகளை கையாண்டு உள்ளனர்.

தமிழகத்தின் சோழ வரலாற்றை பறைசாற்றும் வகையில் தஞ்சை ஓவியங்கள், நடராஜர் சிலை, சரஸ்வதி சிலை, ஸ்ரீரங்கம் தேர் என அனைத்தையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையத்தில் புறப்பாடு பகுதியில் 10 வாயில்களும், வருகை பகுதியில் 6 வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 15 எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 40 இமிகிரிஷேன் மையங்கள், 48 செக் இன் மையங்கள், 3 விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட், 1,000 கார் பார்க்கிங் வசதி என சிறப்பமசங்களின் லிஸ்ட் நீள்கின்றன.

இன்னும் இதில் முக்கியமானவை என்னவென்றால் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை 2 முனையத்தின் நுழைவு வாயிலில் அமைத்திருப்பது தான். இது வெளிநாட்டு மற்றும் வெளிமாநில பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளன. மேலும், சோலார் மூலம் மின்சாரம் பெறத்தக்க வகையில் விமானநிலையத்தின் 2வது முனைய மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் 75 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்துக்கு எதற்கு 2வது முனையம் என்ற கேள்வி பலருக்கும் எழும். திருச்சியை பொறுத்தவரை தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள வளரும் மாநகரமாகும். சென்னை, கோவைக்கு இணையாக திருச்சி மாநகரத்தின் உள்கட்டமைப்பு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. விமான சேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. திருச்சி - ஹைதரபாத், திருச்சி - டெல்லி, திருச்சி - வியட்நாம் என நேரடி விமான சேவைகள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 143 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 24 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர், இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர் ஆகியோரின் ஒப்புதல் பெறுவது அவசியம். அந்த வகையில், (2019-20) கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா 2021, டிச.9-ம் தேதி நடைபெற்றது. அதன்பிறகு (2020-21), (2021-22) மற்றும் (2022-2023)-ம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது. இதனால், தன்னாட்சி மற்றும் இணைப்புக் கல்லூரிகளிலும் பட்டமளிப்பு விழா நடத்துவது கேள்விக்குறியாகியிருந்தது.

இதன் காரணமாக, 3 மாதங்கள் மட்டுமே செல்லத்தக்க சான்றிதழை (Provisional certificate) வைத்துக்கொண்டு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு, வேலைவாய்ப்பு பெறுவதில், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதற்கு, உயர்கல்வித்துறை அமைச்சகத்துடனான பனிப்போரால், ஆளுநர் தரப்பிலிருந்து அனுமதி வழங்காததே காரணம் எனக் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே, பாரதிதாசன் பல்கலைக்கழக 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முனைவர் பட்டம் பெற தகுதியானவர்கள், அதற்கான விண்ணப்பத்தை ஆக.16-ம் தேதிக்குள்ளும், ஏப்.2023-க்கான தரத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்கள், பட்டச்சான்றிதழ் விண்ணப்பத்தை ஆக.16-ம் தேதிக்குள்ளும் பல்கலைக்கழக தேர்வு நெறியாளருக்கு அனுப்பி வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தவகையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், பட்டயம், சான்றிதழ் படிப்பு மாணவர்கள் என 2.82 லட்சம் பேர் பட்டம் பெற விண்ணப்பித்துள்ளனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தர வரிசையில் இடம்பெற்ற (RANK HOLDERS) 236 மாணவர்கள் மற்றும் 1272 முனைவர் பட்ட மாணவர்கள் (Ph.D) என 1528 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் சுமார் 600 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கில் அமர்வதற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்று, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுள்ள 30 மாணவர்களுக்கு தங்கப் பதக்கத்தை பிரதமர் வழங்குகிறார்.  மீதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக கலையரங்கில் நடைபெறும் விழாவில் பட்டங்களை பெறுகின்றனர் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் வருகையையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 2 நாட்களாக மேற்கொண்டு வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தை தூய்மைப்படுத்தி, அழகுப்படுத்தும் பணி, பட்டமளிப்பு விழா அரங்கு, பூங்காக்கள், அனைத்து சுவர்களிலும் வர்ணம் பூசுதல் பணி, அலங்காரப் பணிகள் என தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தரமற்ற நிலையில் உள்ள தார்சாலையைப் புதுப்பிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் யாரும் டிச.31-ம் தேதி வரை விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் வருகையையொட்டி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், DIG பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் பாரத பிரதமர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, விமான நிலையத்திற்கு வந்து இரண்டாவது முனைய திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்ப இருப்பதால் 7500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் வருகை ஒட்டி ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision