விபத்தில் சிக்கி நடக்கமுடியாத பெண்ணை அசாதாரணமாக தூக்கி  காப்பாற்றிய திருச்சி பெண் காவலர்

விபத்தில் சிக்கி நடக்கமுடியாத பெண்ணை அசாதாரணமாக தூக்கி  காப்பாற்றிய திருச்சி பெண் காவலர்

திருச்சி பால்பண்ணை சந்திப்பு எந்த நேரமும் பரபரப்பான போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.  திருச்சி மாநகர் மற்றும் காந்தி சந்தைக்கு வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் காலை நேரத்தில் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்கள் என பரபரப்பாக காட்சி அளிக்கும் இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

பணி நிமித்தமாக பால்பண்ணை சிக்னலை கடக்கும்போது பின்னே வந்த வாகனம் அவர் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் அவருடைய கால் எலும்பு முடிந்துவிட்டது. அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அப்போது அங்கு போக்குவரத்து பணியில் இருந்த காவலர் லட்சுமி கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை அப்படியே தூக்கிவந்து இருக்கையில் அமர வைத்தார். பின்பு குடிநீர் கொடுத்து அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டறிந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

எல்ஐசி முகவரான மணிமேகலை உய்யக்கொண்டான் திருமலையில் வசித்து வருவதாக தெரிவித்தார். பரபரப்பான அந்த சிக்னல் பத்து நிமிடம் இந்த சிறிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து  பெண் காவலர் உடனடியாக அவரை நடக்க முடியாத நிலையில் தூக்கிவந்து அமர வைத்து  உதவியதை அப்பகுதியில் கடந்து சென்றவர்கள் வெகுவாக பாராட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO