டிரைவிங் துறையிலும் பெண்கள் ஆதிக்கம் பெற வேண்டும்-மதிவதனி

டிரைவிங் துறையிலும் பெண்கள் ஆதிக்கம் பெற வேண்டும்-மதிவதனி

வாகனம் ஓட்டத் தெரிந்து வைத்திருப்பதென்பது இந்தத் தலைமுறைப் பெண்களுக்கான அவசியத் தகுதி. அவரவர் வசதிக்கேற்ப டூவீலரோ, நான்கு சக்கர வாகனமோ... ஓட்டக் கற்றுக்கொள்வதன் மூலம் பலவகையான வாழ்க்கைச் சிக்கல்களைத் தவிர்க்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்து வைத்திருப்பதை பிசினஸாகவும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணம் திருச்சி உறையூர் சேர்ந்த மதிவதனி. சிறு வயதிலிருந்து எனக்கு கார் ஓட்டுவது என்றால் மிகவும் பிடிக்கும்.ஆனால் பல குடும்பத்தில், தங்கள் வீட்டுப் பெண்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுக்க ஆர்வம் காட்டுவதில்லை

எனக்கு வாகனங்கள் நன்றாக ஓட்டத் தெரியும் என்பதால், சாலைகளில் பயணிக்கும் தன்னம்பிக்கையும், சுதந்திர உணர்வும் இருந்தது. நாம் ஏன் இதை மற்ற பெண்களுக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது; ஏன் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிறந்த ஓட்டுனர்களாக்கும் பயிற்சியை அளிக்கக்கூடாது என்ற எண்ணம் என்னுள் மேலோங்கியது. பிடித்த விஷயத்தையே பிசினஸ் ஆக மாற்றலாம் என்று யோசித்தேன். அப்படி தொடங்கப்பட்டது தான் வதனி டிரைவிங் ஸ்கூல். கடந்த 20 வருடங்களாக என்னுடைய டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறேன் இப்போது வரை நான் பயிற்சி அளித்து வருகிறேன். 

இன்றைய காலகட்டத்தில் ஒருவரை இன்னொருவரை சார்ந்து இருப்பது என்பது சற்று கடினம் தான் அதனாலவே இன்றைய பெண்கள் தங்களுடைய வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்று வாகனம் ஓட்டுவதற்கு அதிகம் விரும்புகின்றனர்.கல்லூரி மாணவிகள் பணி செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும் பெண்கள். என்று என்னிடம் பயிற்சிக்கு வருகின்றனர்.

கத்துக்கொடுக்கும்போது வழக்கமான டிரைவிங் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்கிற மாதிரி இல்லாம புதுமையா யோசிச்சேன். அதாவது ரொம்ப டெக்னிகலா இல்லாம, ரொம்ப ஈஸியா அவங்களுக்குக் கற்றுத் தருகிறேன். 20 வருடங்களாக தொடர்ந்து இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக தங்க தாரகை விருது வெற்றி தாரகை விருது, மகளிர் தின விழாவில் உஜாலா நிறுவனத்தின் சார்பில் சப்ஸ்டன்ஸ் விருது என்று பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision