திருச்சி நகரின் வளங்களையும், வாழ்வியலையும் அழகாய் காட்டும் - STREETS OF TRICHY

திருச்சி நகரின் வளங்களையும்,  வாழ்வியலையும் அழகாய் காட்டும் - STREETS OF TRICHY

"திருச்சி என்றாலே மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், காவிரி பாலம்,கல்லணை, முக்கொம்பு தான்!  இவற்றைத் தவிர திருச்சியில் என்ன இருக்கிறது" என்று கேட்பவர்களுக்கு, திருச்சியில் இத்தனை எழில்மிகு இடங்கள் இருக்கின்றனவா! திருச்சி இத்தனை அழகானதா என்பதை புகைப்படம் மூலம் உலகிற்கு அடையாளப்படுத்தி வருகிறது "Streets of trichy "இன்ஸ்டாகிராம் பக்கம்.

2018 இல் தொடங்கப்பட்ட இப்பக்கத்தினை இப்போது17000பேர்பின்தொடர்கிறார்கள்.

திருச்சியின் அடையாளங்களை முன்னிறுத்துவதோடு திருச்சியின் எழில்மிகு இடங்கள், திருச்சியின் வளங்களை இந்த பக்கம் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றது.

தன் புகைப்படங்கள் வழியே Streets of trichy என்ற பக்கத்தில் திருச்சிநகரை இன்னும் அழகாய் மேம்படுத்தி காட்டிக்கொண்டிருக்கிறார் புகைப்பட கலைஞரான செல்வ முத்துக்குமார்,

27 வயதான செல்வமுத்துக்குமார் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு குடிமைப்பணி தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

திருச்சி நகரின் அழகை மட்டுமின்றி திருச்சி மக்களின் வாழ்வியலையும் அழகாய் காட்டுகிறது இவரது புகைப்படங்கள்.நாளடைவில் இந்த பக்கத்தை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இந்த பக்கத்தின் மூலம் மக்களுக்கு ஒரு நல்ல ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பும் உண்டாகி சமூக அக்கறை கொண்ட பல செயல்பாடுகளினை செய்து வருகிறார்.

 கொரானா காலகட்டங்களில் மக்களுக்கு உதவும் பல்வேறு தகவல்களை திருச்சி சார்ந்த மக்களுக்கு உதவிடும் வகையில் தன் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு கொண்டு மக்களுக்கு உதவியுள்ளார்.

அதே சமயம் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து சாலையோர உயிர்களுக்கு உணவு, பாதுகாப்பு கிடைத்திடவும் உதவியிருக்கிறார்.

 பொழுது போக்கிற்காக மட்டும் என்று நில்லாமல், பொதுநல தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கும் செல்வமுத்துகுமார் நம்மிடம் கூறுகையில்,

எனக்கு பயணம் என்றால் மிகவும் பிடிக்கும் பயணத்தின்போது புகைப்படங்கள் எடுப்பது என்னுடைய வழக்கம்.புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட நினைத்தேன். ஆனால், காலப்போக்கில் அதன் மூலம் நல்ல தகவல்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால் நகர மக்களுக்கு தேவையான தகவல்களையும் முக்கிய நிகழ்வுகளையும் பதிவிட தொடங்கினேன்.

 இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களினை அதிகமாக பயன்படுத்துகின்றனர் எனவே அவர்களுக்கு தேவையான தகவல்களையும் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது அதனுடைய தொடர்ச்சியாய் இந்த பக்கத்தில் நகரம் சார்ந்த முக்கிய தகவல்கள் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றையும் பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.புகைப்படங்கள் மட்டும் பதிவிடாமல் புகைப்படத்தோடு சார்ந்ததகவல்களையும் மக்களுக்கு பயன்படும் வகையில் பதிவிடுவது இன்னும் பல தகவல்களை தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தை உண்டாக்குகிறது"  என்றார்.

புகைப்படங்களுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு,இரண்டாம் உலகப் போரின் போது ஒரு பெண் குழந்தை சாலையில் ஓடி வரும் புகைப்படம் உலகில் உள்ள அனைவரின் மனதையும் உலுக்கியது. இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவர அப்புகைப்படம் மிகப் பெரும் காரணமாகவும் இருந்தது.

  இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கும் சமூகத்தினரும் இந்த புகைப்படங்கள் மூலம் பல தகவல்களை பெற்று வருகின்றனர் எனவே அவற்றை சரியான முறையில் சமூக அக்கறை கொண்டு பதிவிடும் செல்வமுத்துக்குமாரின் பயணமும் பணியும் தொடரட்டும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn