ஆன்லைனில் குழந்தைகளுக்கு கோடிங் பயிற்சி அளிக்கும் திருச்சி கல்லூரி மாணவி

ஆன்லைனில் குழந்தைகளுக்கு கோடிங் பயிற்சி அளிக்கும் திருச்சி கல்லூரி மாணவி

பொறியியல் மாணவர்களே கோடிங் பைத்தான்  போன்ற புரோகிராம்கள் செய்ய சலித்துக்கொள்ளும் சூழலில் ஒன்பது வயது குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் எளிதாக கோடிங் கற்பித்து வருகிறார். திருச்சி உறையூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி விஸ்வாதிகா. 

இதுகுறித்து விஸ்வாதிகாவிடம் கேட்ட போது தன்னுடைய இந்த ஒன்பது மாத கால பயணத்தை பற்றி விவரிக்கத் தொடங்கினார். பெங்களூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். கொரோனா காலகட்டம் என்பதால் எனக்கும் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கின்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் என்னுடைய வகுப்புகள் முடிந்த பின்னர் மாலை நேரத்தில் அமெரிக்காவில் உள்ள எனது மாமா பையனுக்கு  இயற்பியல் வேதியல் பாடங்களை ஆன்லைனில் கற்றுத் தரக் கேட்ட போது நானும் ஆன்லைனில் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

அவனும் ஆர்வமாக கற்றுக்கொண்டான் தொடர்ந்து அவனுடைய நண்பர்களும் என்னிடம் கல்வி கற்க ஆரம்பித்தனர். பொதுவாகவே எனக்கு பாடம் சொல்லித் தருவதில் அதிக ஆர்வம் உண்டு. என்னுடைய பள்ளிப்பருவக்காலம் முதலில் என் நண்பர்கள் தொடங்கி என்னிடம் சந்தேகம் கேட்கும் அனைவருக்கும் ஆர்வமாக கற்றுத் தருவேன். நான் சொல்லித் தருவது அவர்களுக்கு எளிமையாக புரியும் என்பார்கள்
அந்த வகையில் இப்படி தொடங்கிய இந்த பயணம் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாட்டு மாணவர்களோடு என்னுடைய பயணம் தொடர்ந்து வருகிறது.


அவர்களுக்கு  இயற்பியல் வேதியியல் பாடத்தை தாண்டி புதிதாக ஒன்றை கற்றுக்கொடுக்க விரும்பியபோதுதான் நான் கற்றுக்கொண்ட கோடிங் (codeing ) போன்றவற்றை கற்றுக் கொடுக்கலாம் என்று தோன்றயது. சிறுவயது முதலே இது போன்ற தகவல் தொழில்நுட்பங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் போது அவர்களுடைய ஆற்றல் வருங்காலத்தில் சிறந்ததாக இருக்கும் அதுமட்டுமின்றி இந்த குழந்தை பருவத்தில் தேவையற்றவைகளில் அவர்களுடைய நேரத்தை செலவழிப்பதை குறைக்க இயலும் என்று நினைத்தேன்.

மாணவர்களும் அதிக விருப்பத்துடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தனர் வகுப்புகள் முடிந்த பின்பும், இதனையே தொடர்ந்து அவர்கள் செய்து புதிய புதிய புரோகிராம்களை உருவாக்கும் பொழுது அவர்களுடைய பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகளோடு மட்டும் பயணித்துக்கொண்டிருந்த என் பயணம் அடுத்தபடியாக கல்லூரி மாணவர்களிடமும் சென்று சேர்ந்தது கல்லூரி மாணவர்களுக்கு பைத்தான் (python) போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறேன். அவர்களுக்கு விரிவாகவும் பாடத்திட்டத்தில் இருப்து போன்று  மட்டுமில்லாமல் அவர்களுடைய நேர்முகத் தேர்வுகளுக்கு  நுழைவுத் தேர்வுகளுக்கு பயன்படும் விதத்தில் பயிற்றுவித்து வருகிறேன்.

20 வயதான என்னிடம் பல கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் கற்றுக்கொள்ள ஆர்வமாக வருகின்றார்கள். அனைவருமே நான் கற்றுக் கொடுப்பதை பாராட்டியும் மேலும் ஊக்கப்படுத்தியது வருகின்றனர். அந்த ஊக்கமே என்னால் முடிந்த வகையில் எளிமையாக கற்றுக் கொடுக்க நம்பிக்கையளிக்கிறது. சாதாரணமாக தொடங்கிய இந்த பயணம் இன்றைக்கு எனக்கு மாதம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டித்தரும் ஒரு வேறு ஒரு வேறு ஒரு பரிணாமத்தை தந்துள்ளது. 

இந்த வருமானமானது என்னுடைய கல்லூரி படிப்பிற்கும் பெற்றோருக்கு பயன்படும் வகையில் மேலும் என்னை ஊக்கப் படுத்தும் விதமாகவும் இருக்கின்றது. என்ன தான் கல்வி கற்றுத் தருவதில் எனக்கு ஆர்வம் இருப்பினும், புதிய சாப்ட்வேர்களை உருவாக்கி புது சாப்ட்வேர் ஸ்டார்ட் அப் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எதிர்கால லட்சியம் அதற்கான முதல் முயற்சியாக ஒரு சாப்ட்வேரை உருவாக்கி உள்ளேன் என்கிறார் விஸ்வாதிகா.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC