ஓவியம் முதல் ஆரி வரை அசத்தும் திருச்சி பெண்
திருச்சி மலைக்கோட்டை அருகே தன்னுடைய தனி திறமைகளை தனக்கான வருமானம் ஈட்டும் தொழிலாக மாற்றி இருக்கிறார் ஜெயலட்சுமி . சிறு வயதிலிருந்து படம் வரைதல் கையெழுத்து பயிற்சி இப்படி எனக்கு நானே என்னுடைய பொழுதுபோக்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருந்தது. சிறு வயதிலேயே எம்பிராய்டரி போடவும் கற்றுக் கொண்டேன்.
அம்மாவிற்கு தையில் மீது அதிக ஆர்வம் அவர்களை பார்த்து எனக்கு தையல் ஆர்வம் எழுந்தது.பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் தையல் பயிற்சியயையும் கற்றுக்கொண்டேன். மற்றும் மற்றவை அனைத்தும் என்னுடைய படைப்பாற்றலின் மூலம் கற்றுக்கொண்டதைத் தவிர தனியான வகுப்புகளுக்கு சென்று கற்றுக் கொள்ளவில்லை. நாளடைவில் பலவற்றை புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.
எம் காம் முடித்துவிட்டு நமக்காக ஏதேனும் ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்று நினைத்தேன் இதற்கிடையில் அவ்வப்போது குழந்தைகளுக்கும் ஓவிய பயிற்சி கையெழுத்து பயிற்சி என்று செய்து வந்தேன். ஏன் இதை நம்முடைய முழு நேர வேலையாக மாற்றக் கூடாது என்று கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு அகாடமி ஆகவே என்னுடைய வீட்டு மாடியிலேயே தொடங்கினோம்.
ஏற்கனவே என்னை பற்றி தெரிந்தவர்கள் என்னிடம் அவர்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும்படி வந்து கேட்டார்கள் இப்படி ஆரம்பித்ததுதான் இன்று ஆன்லைன் வகுப்புகள், கையெழுத்து பயிற்சி, ஓவிய பயிற்சி என்று வகுப்புகள் நடந்து வருகிறது. ஆங்கில பயிற்சிக்கு மட்டும் தனி என்று ஒரு ஆசிரியரை நியமித்துள்ளேன். மற்றபடி எல்லா வகுப்புகளையும் எடுப்பது நான் மட்டுமே குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க நினைத்து புதிதாக அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஏதேனும் கற்றுக் கொடுக்க விரும்பும் பெற்றோர்களை பார்க்கும்பொழுது மகிழ்ச்சியாக இருக்கும் அவர்கள் குழந்தைகள் வரும் காலத்தில் பல திறமைகளை தெரிந்து கொண்ட பன்முக திறமையாளர்களாக வளர வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அதற்கு ஏற்றவாறு குழந்தைகளின் தனித்திறமையை வளர்க்க உதவி வருகிறோம்.
என்னதான் நம்மிடம் திறமை இருந்தாலும் அதை இந்த உலகிற்கு எடுத்துச் சொல்ல ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது தான் அதற்காக என்னுடைய சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொண்டேன் ..என்னுடைய வேலைப்பாடுகள் வகுப்புகள் குறித்து அதில் பதிவிட தொடங்கினேன் இன்று அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ஆன்லைன் பயிற்சி வெளிநாட்டு மாணவர்களும் கற்றுக் கொள்கின்றனர். https://www.instagram.com/zaramacademyofexcellence?igsh=MTdjNDZhYmt5djk4eQ== கோடை காலங்களில் சிறப்பு வகுப்புகளிலும் சலுகையோடு அளிக்கப்பட்டு வருகிறது.
தையல் பயிற்சி ஆரி எம்பிராய்டரி பயிற்சி என்று பெண்களுக்காக பயிற்சிகளும் அளித்துவருகிறேன். https://www.instagram.com/zaramaaridesigner?igsh=NjZkOWF5YXk2dDNj கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற வரிகளுக்கு ஏற்ப என் வாழ்வில் பொழுது போக்காக கற்றுக் கொண்டது இன்று எனக்கான வருமானம் ஈட்டும் தொழிலாக மாறி உள்ளது வருங்காலத்தில் தொழில் சார்ந்த பயிற்சிகளை பல பெண்களுக்கு அளித்து அவர்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் எ ன்கிறார் ஜெயலட்சுமி
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision