கொரோனாவால் தாயை இழந்த சிறுமிக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெண் காவலர்

கொரோனாவால் தாயை இழந்த சிறுமிக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பெண் காவலர்

மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அறிவுறுத்தலின் பெயரில் காக்கி கவசங்கள் என்ற திட்டம் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை வாரம் தோறும் அக்குழந்தைகள் குடியிருக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பெண் காவலர்கள் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் உரையாடி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.

நேற்று மண்ணச்சநல்லூர் காவல் நிலைய பெண் காவலர் சந்தியா என்பவர் மண்ணச்சநல்லூர் வட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓமாந்தூர் கிராமத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளை பார்க்க சென்றபோது தாயாரை இழந்த தனீஷ்கா (6) என்பவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்து அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இதை அறிந்த மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் தாயாரை இழந்த சிறுமிக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செயல்பட்ட பெண் காவலரை வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO