திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் கணக்கில் வராத 3 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் கணக்கில் வராத 3 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் மையத்தில் பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் ரவீந்திரன் மற்றும் உதவி மேலாளர் கம்பன் ஆகியோரிடம் கணக்கில் இல்லாமல் இருந்து ரூபாய் 3 லட்சம் இருந்ததாக  கூறப்படுகிறது.

அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது மட்டுமன்றி உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன், திருவெறும்பூரில் உள்ள உதவிப் பொறியாளர் கம்பன் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரு குழுக்களாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், லட்சக்கணக்கில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியதாக லஞ்சஒழிப்புத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO