சிறுதானியங்களில் பிரட் பீஸா ஆரோக்கிய உணவு தயாரிப்பில் அசித்தும் விஷ்ணு பிரியா

சிறுதானியங்களில் பிரட் பீஸா ஆரோக்கிய உணவு தயாரிப்பில் அசித்தும் விஷ்ணு பிரியா

என் குழந்தைக்கு ஸ்நாக்ஸ் செய்ய ஆரம்பிச்சப்போ ஆரோக்கியமானதா கொடுக்க நினைத்தேன் இப்போ அதுவே எனக்கான ஒரு தனி அடையாளமாக உருவாகியிருக்கு சிறுதானியங்கள்ல பிரெட், கேக், பிரௌனி, பீட்சானு என் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுக்கிறதோட, அதை தொழிலாவும் மாற்றி, பேக்கிங் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கேன்” என்கிறார் திருச்சி திருவானைக்காவல் சேர்ந்த விஷ்ணு பிரியா

"பேக்கரிகளுக்குச் சென்று, குழந்தைக்கு கொடுப் பதற்காக கோதுமை மாவில் ஓமம் சேர்த்து பிஸ்கட் தயார் செய்து தர முடியுமா? என கேட்டேன். எல்லோருமே ஒரே மாதிரியாக 'முடியாது' என்றார்கள். எனக்குத் தெரிந்த முறையில் கோதுமை மாவில், ஓம பிஸ்கெட் செய்து கொடுத்தேன். அதைக் கடித்து சாப்பிடுவதற்கு மகள் சிரமப்பட்டாள். அதையே மாவாக்கி பாலில் கலந்து கொடுத்தேன். ருசித்து பருகினாள். அப்போது தான் எனது மகளுக்காக தயாரித்த உணவு களையே விற்பனை செய்தால் நிறைய இளம் தாய்மார் களும், குழந்தைகளும் பயன்பெறுவார்கள் என்று தோன்றியது" 

சொந்த ஊரு சென்னை. பொறியியல் பட்டதாரி. கல்யாணத்துக்கு அப்புறம் கணவர் விஜயகுமாருடன் லண்டன் போனப்ப, ஏற்கெனவே எனக்கு ஆர்வம் இருந்த பேக்கிங்ல இன்னும் நிறைய வெரைட்டிகள் பண்ண ஆரம்பிச்சேன். ஆனாலும், என் பையன் அருள்மொழிவர்மன் பிறந்தப்போ, அவனுக்கு கேக், பீட்சானு ஜங்க் ஃபுட் கொடுக்கும்போதெல் லாம் கவலையா இருக்கும். பிறகு கணவரோட வந்து அவரோட சொந்த ஊரான திருச்சியில் செட்டில் ஆனதுக்கு அப்புறம், என் ரெண் டாவது பொண்ணு கயல்விழி பிறந்தா. அவளுக்கு எட்டு மாசம் ஆனப்போ, ஓமம் பிஸ்கட் கொடுக்க ஆசைப்பட்டு வாங்கினேன்.

ஆனா, அதுலேயும் மைதா, வெள்ளை சர்க் கரைனுதான் சேர்த்திருந்தாங்க. நிறைய கடைகள்ல போய், கோதுமையும், நாட்டுச்சர்க்கரையும் சேர்த்து செஞ்சி தர முடியுமானு கேட்டேன். வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. நானே செய்ய முடிவெடுத்தேன்’’ என்பவர் கோதுமை, ராகி, நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு, பசு நெய், வெண்ணெய், நிறத்துக்கு பழங்கள் என பேக்கிங் களத்தில் இறங்கியிருக்கிறார்.முதல்ல ஓமம் பிஸ்கட்தான் செஞ்சேன். கோதுமைல எந்தவிதமான செயற்கைப் பொருள்களோ, சுவையூட்டியோ சேர்க்காத தால சுவையில் முழுமையா வந்ததுனு சொல்ல முடியாது. ஆனாலும் குழந்தைக்கு ஊட்டி விட்டப்போ சாப்பிட்டுச்சு. 

அப்போதான், வெள்ளை சர்க்கரை, மைதானு நாமதான் குழந்தைகளோட நாக்கை பழக்குறோம். ஆரோக்கியமானதை ஆரம்பத்தில் இருந்தே கொடுத்தா அவங்க சாப்பிடுவாங்கனு புரிஞ்சது. கோதுமை, ராகி, நாட்டுச்சர்க்கரைல கேக் செஞ்சு, வெண்ணெய், பனங்கற்கண்டு சேர்ந்து க்ரீம் செஞ்சேன். முளைகட்டின சிறுதானியங்கள்ல பிஸ்கட் செஞ்சேன். ராகி மாவு, நாட்டுச்சர்க்கரை, வெல்லம் சேர்த்து பிரௌனி செஞ்சேன். கோதுமை மாவு, ராகி மாவை சேர்த்து பீட்சா செஞ்சேன். இப்படி நான் செஞ்ச கேக், பிரெட், பீட்சா, பிரௌனி எல்லாமே ஆரோக்கியமா மட்டு மில்ல, சுவையாவும் இருந்தது, என் பிள்ளைங்க சப்புக் கொட்டிச் சாப்பிட்டாங்க’’ என்பவர், இதை பிசினஸ் ஆக முன்னெடுத்தது பற்றி தொடர்ந்தார். ‘`2015-ல இருந்து நான் கேக் பண்ணினாலும், 2018-க்கு அப்பறம்தான் கோதுமை, ராகினு புது முயற்சிகளை ஆரம்பிச்சேன். அதையெல்லாம் ஏதோ டைரி எழுதுற மாதிரிதான் என்னோட சமூக வலை தளங்கள்ல போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு பலரும் தங்களுக்கும் செய்து தரச் சொல்லிக் கேட்க, என்னோட ‘ழகரம் பேக்கர்ஸ்’ உருவானது. 

என் கேக்கை ஒருமுறை சாப்பிட்டவங்க மற்றவங்களுக்குப் பரிந் துரைக்கிறதை தவிர்க்க முடியாத அளவுக்கு நான் தரமாவும் சுவையாவும் செஞ்சதால, இலவச வாய்வழி விளம்பரம் கிடைக்க ஆரம்பிச்சது. நாள்கள் ஆக, ஆக இத்தனை பேர் ஆரோக்கியத்தை தேடி வருவாங்கனு நான் நினைச்சுப் பார்க்கல. இன்னொரு விஷயம்... நான் செய்ற கேக் வகைகள் எல்லாமே முட்டை சேர்க் காதவை’ கேக் ஆர்டர்களுக்கு இணையா, அதை செய்யக் கத்துக்கொடுக்கச் சொல்லிவர்றவங்க இருக்காங்க. இந்த மாதிரி கத்துக்கொடுக்க ஆட்களோ, வீடியோவோ இல்லாததால நமக்கு அவ்ளோ வரவேற்பு. குறிப்பிட்டு சொல்லணும்னா, என்னோட ராகி பிரௌனியை சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி, ‘என் தாத்தா, பாட்டிக்கு நான் இதை செஞ்சு கொடுத்தா அவ்ளோ ஹேப்பி ஆவாங்க, கத்துத்தர்றீங்களா?’னு கேட்டு, க்ளாஸ் வந்தது எனக்கே சர்ப்ரைஸ். இதுவரை கிட்டத்தட்ட 500 பேர் வரை கத்துக் கொடுத்துருப்பேன். அவங்கள்ல பலர் வீட்டுக்கும், வீட்டிலிருந்தே பிசினஸா வும் இப்போ இதை பண்ணிட்டு இருக் காங்க’’ என்று சொல்லும் விஷ்ணு ப்ரியா, இப்போது இதில் தான் மாதம் 30,000 வரை வருமானம் பார்ப்பதாகக் கூறுகிறார்.

"கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரை, போன்றவற்றைக் கொண்டு கேக் தயாரிக்கிறேன். கேக்குகளில் நிறத்துக்காக பீட்ரூட் சாறு, குங்குமப்பூ போன்ற வற்றை பயன்படுத்துகிறேன். தற்போது குக்கீஸ், ப்ரௌனி, பீட்சா, கேக். பிரெட் எல்லாவற்றையும் கோதுமை மாவில்தான் தயார் செய்கிறேன்" என்கிறார் விஷ்ணுபிரியா. "சுயதொழில் தொடர்பான கருத் தரங்குகளில் கலந்துகொண்டு, சில கல்லூரிகளில் பயிற்சி கொடுத்திருக் கிறேன். இதுவரை பல பெண்கள் என்னிடம் பயிற்சி பெற்றுள்ளனர். சமூக வலைத்தளங்களில் சத்தான உணவுகள் குறித்து பதிவிட்டு வருகிறேன். பலரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்" என்று கூறும் விஷ்ணுபிரியா ஆன்லைனில் பேக்கிங் வகுப்புகள் நடத்தி வருகிறாராம்.

நம்பிக்கையோடு தொடர்ந்து ஆரோக்கியமான ஒன்றைக் கொடுத்தால் நம் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதை என் வாழ்வில் கற்ற வெற்றி. வீட்டிலிருந்து பேக்கிங் செய்து வந்து நான் தற்போது தனியென இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து என்னுடன் ஐந்து பேர் கொண்ட குழு பணியாற்றும் வகையில் முன்னேறி உள்ளேன் .... சிறந்த பேக்கர் விருது தொழில் முனைவோர் விருது என்று என்னுடைய திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் தொடர்ந்து இனி இதில் பயணிக்க ஊக்கம் அளிக்கிறது  என்கிறார் விஷ்ணுபிரியா ..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3ho

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision