இரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்!!

இரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்!!

Advertisement

திருச்சி திருவெறும்பூர், மலை கோவில், காட்டூர், துவாக்குடி, அண்ணா வளைவு ஆகிய பகுதிகளில் ஆதரவற்று பேருந்து நிலையங்களில் தஞ்சமடைந்து இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு திருச்சி திருவெறும்பூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், துவாக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காந்திமதி, சமூக ஆர்வலர்கள் லெனின், சரவணன், அனிலா ஆகியோர் ஒன்றிணைந்து போர்வைகளை வழங்கி உதவினர்.

கடந்த சில நாட்களாக திருச்சியில் பெய்த மழை காரணமாக கடும் குளிர் நிலவி வரும் சூழலில், சாலையோரம் ஆதரவற்று இருந்தவர்களுக்கு ஈகை மனப்பான்மையுடன் உதவியுள்ளனர் காவலர்கள்.

Advertisement

காவலர்களின் ஈர மனமும், சமூக ஆர்வலர்களின் இல்லாதோருக்கு உதவ வேண்டும் என்ற ஈகை குணமும் மக்களிடையே பாராட்டுகளையும், அவர்களின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0