கொரோனா நோயாளிகள் முன்கள பணியாளர்களுக்கு இலவச உணவு தரும் தொண்டு நிறுவனம்
கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல விதமான முறைகளில் பல்வேறு அமைப்பினரும் உதவி செய்து வருகின்றனர்.
அவ்வகையில் களஞ்சியம் ஃபுட் பேங்க் தொண்டு நிறுவன அமைப்பு மற்றும் UPPERROOM CAFE&BAKES உணவகமும் இணைந்து கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் இலவசமாக மதிய உணவு வழங்க கோவிட் கேர் அட் திருச்சி (COVID CARE AT TRICHY)என்ற பெயரில் உதவிட முன்வந்துள்ளனர்.
இதனைக் குறித்து UPPERROOM உணவகத்தின் உரிமையாளர் சூசன் ஜெயராஜ் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை இன்றிலிருந்து தொடங்கியுள்ளோம்.
உணவு தேவைப்படுபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது, அவர்களுக்கு அடுத்த 14 நாட்களுக்கு தேவையான உணவை நாங்களே அவர்களுடைய வீடுகளுக்கு தேடிச்சென்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவமனையிலேயே உணவு வழங்கிடவும் ஏற்பாடு செய்துள்ளோம்.வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு அளிக்கும்போது உணவினை வீட்டின் வாசலிலேயே வைத்து விட்டு வருவதாகவே முடிவு செய்துள்ளோம். ஏனெனில், பாதிக்கப்பட்டவருக்கும் உணவினை எடுத்து செல்பவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இதனை மேற்கொள்ள இருக்கிறோம்.
இதன் தொடக்க நிகழ்வாக இன்றைக்கு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உணவளித்துள்ளோம்.மதிய உணவில் சத்தான உணவாக இருக்க வேண்டும் என்பதற்காக சைவ முறையில் ஒரு வெரைட்டி ரைஸ் மற்றும் ஒரு காய்கறியை கூட்டு அல்லது பொரியல் ஆக சேர்த்து அளிக்கிறோம்.
நோயாளிகளுக்கு காலை உணவும் 500 நபர்களுக்கு கொண்டைக்கடலை போன்ற சத்து நிறைந்த பொருட்களையும் மாலைநேரத்தில் தரும்படி கேட்டுள்ளனர், அதனை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.கண்டோன்மென்ட் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எங்களுக்கு ஆர்டர் வந்துகொண்டிருக்கிறது.மேலும் திருச்சியில் எப்பகுதியில் இருந்து ஆர்டர் செய்தாலும் அவர்களுக்கு உணவினை கொண்டு சேர்க்கும் விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும், அதே நேரம் அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் உணவுகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். கடந்த வருடம் கோவிட் தொற்றால் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாலையோரத்தில் படுத்து உறங்குபவர்களுக்கும் இல்லங்களிலிருந்த 5000 பேர் உணவளித்தோம் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF