நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ,ஊழியர்களின் உயர்வுக்கும் நடுநிலையோடு செயல்படுவதே மனிதவளத்துறை -HR DAY SPECIAL!!

நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ,ஊழியர்களின் உயர்வுக்கும் நடுநிலையோடு செயல்படுவதே மனிதவளத்துறை -HR DAY SPECIAL!!

முதலாளி மற்றும் பணி ஆட்கள் இடையே ஒரு பாலமாக செயல்படுபவர்கள் மனிதவள பணியாளர்கர் (HUMAN RESOURCES-HR) ஒரு வலுவான அமைப்பை உருவாக்குவதில் மனிதவள பணியாளர்களின் பங்கை கொண்டாடுவதற்காக சர்வதேச மனிதவள தினமாக மே 20ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மனிதவளம் என்பது ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் ஒவ்வொரு நபரின் திறன்களையும் திறமைகளையும் நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் வெற்றிபெற செய்வது.

நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் மனித வளத்துறையினர் தங்கள் உழைப்பையும் அறிவையும் முழுமையாய் அளித்திட தயாராக இருக்கின்றனர். மிகவும் சவாலான பணியை மேற்கொள்ளும் சில பணியாளர்கள் இந்த பணி குறித்தும் அவர்களுடைய தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.

ஆன்டனி : Omega Health Care

எல்லாத் துறைகளிலும் இருந்து மனிதவளத்துறை தனித்து தெரிவதற்கான மிக முக்கிய காரணம் இத்துறை சார்ந்தவர்கள் மட்டுமே உணர்வுகளோடு தொடர்புடையவர்கள். ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு சூழலில் இருந்து வருபவர்கள். ஒவ்வொருவரும் தனித் திறமைகள் கொண்டவர்கள். அவர்களை சந்தித்து உரையாடி அவர்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளும்  ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஒன்றை கற்றுக் கொள்பவர்களாக மனிதவளத் துறையை சேர்ந்தவர்கள் பயணிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகள் உணர்வுகளுக்குள் சந்தித்த சவால்கள் மிக அதிகமாக இருந்தது. நேரடியாக ஒருவரை பார்த்து அவர்களுடன் பேசும் அனுபவத்திற்கும் இணைய வழியாகவே பேசும் பொழுது சந்தித்த சவால்கள் மிக அதிகமாக இருப்பினும் அவர்களுடைய தேவையையும் சூழலையும் உணர்ந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்த  போது கிடைத்த மகிழ்ச்சியை வேறு எந்தத் துறையில் இருந்தாலும் கிடைத்திருக்காது அதுவே இந்த துறைக்கான சிறப்பு.

மோகன் - VDart Group

தொழில் சார்ந்த பல நிறுவனங்கள் இருந்தாலும் எல்லா நிறுவனங்களிலும் ஒரு பொதுவான துறையாக செயல்படுவது தான் மனிதவளத்துறை. இந்த மனித வளத்துறை மனிதர்களுடைய திறமையையும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தையும் பெற்றுத் தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். பணியாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் இவர்களின் பங்கு அலாதியானது. இந்தத் துறையில் பணியாற்றுவது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது மனிதர்களுடைய திறமைக்கு அப்பாற்பட்ட இயந்திரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மனித திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்துவதில் ஒரு அங்கமாக செயல்படுவது மிக பெருமைக்குரிய ஒன்றாக கருதுகிறேன் என்கிறார்.

வீரமணிகண்டன் - KMC மருத்துவமணை

நம்மை நம்பி அவர்களுடைய குறைகளையும் அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் கூறும் பொழுது அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கின்ற நாம் அதனை சரியான முறையில் கையாள வேண்டும் இந்த பணியினை பொறுத்தவரை மிகவும் சவாலான ஒன்று யாருக்கும் எந்த நேரத்திலும் நடு நிலையாக இருப்பது. எல்லா நேரங்களிலும் ஒருவர் எல்லோருக்கும் நல்லவராக இருக்க இயலாது. ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இருவருக்கும் சிறந்த முறையில் நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதே அதனை சரியான முறையில் கையாளும் பொழுது நம் பணிக்கான மதிப்பு கூடுகிறது.

சமூகத்தில் இத்துறை பணியின் மீது ஒரு பிம்பம் இருக்கின்றது. நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அல்லது ஏதேனும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டால் நிறுவனத்தால் வழங்கப்பட்டது என்பார்கள். ஆனால் அவர்களுடைய ஊதியக் குறைப்பு அல்லது வேறு விதமான பிரச்சினைகள் என்றால் அதே துறையில் பணியில் இருப்பவர்களை சாடுவார்கள். இதை அனைத்தையும் கடந்து அவர்களின் நலனுக்காக உழைப்பவர்கள் நாங்கள். திருச்சி, சென்னை, அயல் நாடுகளிலும் HR ஆக பணிபுரிந்து விட்டு தற்போது 5 ஆண்டுகளாக காவேரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன்.

இப்பணியின் சிறப்பு யாதெனில் ஒரு பணியாட்களின் தேவையை சக பணியாளர்களை செய்வதற்கு முன்பாகவே அவர்களுடைய தேவைகளையும் திறமைகளையும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் அதே சமயத்தில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உழைப்பையும் பங்களிப்பையும் அளிப்பதே! இத்துறையில் இயந்திரங்களோடு இருக்கும் தொடர்பை தாண்டி ஊழியர்களுடன் நிறுவனத்திடம் அதிக நேரம் செலவழிக்க கூடும் அவர்களுடைய மன நிலையையும் நிறுவனத்தின் தேவையையும் சூழலையும் ஒருவாறு புரியவைக்கும் மிகப்பெரிய சவாலான பணிதான் என்கிறார்.

மனோஜ் கிங்ஸ்லி : MST solutions

பிறருக்கு வாய்ப்புகளை வழங்கும் போது நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது அதேபோன்று அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் போதும் அதனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனவே பணியை நான் விரும்பி செய்து கொண்டிருக்கிறேன். எப்போதுமே பொதுவாக இப்பணியில் இருப்பவர்கள் நிறுவனங்களின் சாதகமாகவே தங்களுடைய செயல்பாடுகளை செய்வார்கள் என்ற ஒரு பிம்பம் இருக்கும் ஆனால் என்னை பொறுத்தவரை அதனை உடைத்து பணியாளர்களோடு பணியாளர்களாக அவர்களுடைய குறை நிறைகளை கேட்டறிந்து அவர்களுடைய உழைப்பு தான் நிறுவனத்தின் வெற்றி எனவே அவர்களுக்காக இணைந்து செயல்பட்டு இவ்வுலகத்தில் இருக்கும் இந்த மாயபிம்பத்தை உடைத்து பணியாளர்களுடன் நேரடியாக அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் பணியாற்றி வருகிறேன் என்கிறார். நிறுவனத்தின் தரம் மற்றும் திறன் மேம்பாட்டில் மனிதவளம் பெரும்பங்கு வகிக்கிறது.

தனி நபரின் திறனை ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனத்தின் தேவை, எதிர்பார்ப்புகளைத் திறம்பட பூர்த்தி செய்யும் மேலாண்மை துறையாகும். ஒரு வெற்றிகரமான திறன்களின் தொகுப்பாக மனிதவளத்தை பயன்படுத்துதல் மற்றும், அதன் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்தல் போன்றவை முக்கிய செயற்பாடுகளாகும். ஒரு தனிநபர் முக்கியமாக நிறுவனத்தின் (அ) சுயமேம்பாட்டுத் தேவைகளை ஆற்றுவதற்காக தயார்படுத்தப் படுகின்றார். "குறித்த காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட அறிதலானது, செயற்பாட்டு ரீதியான ஒரு முன்னேற்றத்துடனான மாற்றத்தை வழங்குகின்றது" என நட்வர் குறிப்பிடுகிறார். இந்த ஒழுங்கமைப்பில் மனித வள வளர்ச்சி என்பது ஒரு கட்டமைப்பைப் போன்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO