யாருக்கேனும் ரத்தம் தேவைப்பட்டால் என்னை அழையுங்கள் -25 முறை ரத்த தானம் செய்த குணசேகரன்

யாருக்கேனும் ரத்தம் தேவைப்பட்டால் என்னை அழையுங்கள் -25 முறை ரத்த தானம் செய்த குணசேகரன்

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் நகை பட்டறையில் பணியாற்றி வருகிறார். ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் வழங்கி வருகிறார். இதுகுறித்து குணசேகரன் கூறுகையில்.. பட்டறையில் பணியை தொடங்கியதிலிருந்து ரத்ததானம் வழங்கி வருகிறேன். எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்களின் ரத்ததானம் செய்ய வேண்டுமென்று ஊக்குவித்து வருகின்றேன்.

ரத்த தானம் செய்வதால் நமக்கு எவ்வித இடையூறும் இல்லை  அதுமட்டுமின்றி நாம் செய்யும் ஒரு உதவியால் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது என்ற மனநிறைவு நான் செய்யும் சேவைக்கான மிகப்பெரிய விருது. ரத்தம் கொடுத்தால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை தான் எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. அதே உற்சாகத்தில் 25 முறை ரத்ததானம் செய்து, பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளேன்

ரத்த தானம் வழங்கி, ரத்த வங்கிகள் சான்றிதழும் வழங்கி பாராட்டி உள்ளனர். இதுவரை 25 முறை ரத்த தானம் கொடுத்த ஒருவரின் வாழ்நாள் முழுவதும் முடிந்த வரை மக்களுக்கு உதவும் வகையில் ரத்த தானம் வழங்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை . கொடுக்கக் கொடுக்க, ரத்தம் உடலில் ஊறிக்கொண்டே இருக்கும். நம்மில் பலர் ரத்ததானம் செய்வதற்குப் பயப்படுகிறார்கள். அப்படிப் பயப்படக் கூடாது. அடிபட்டு ரத்தம் வெளியேறினால் வீணாகத்தானே போகும்.

ஒருவர் ரத்ததானம் செய்தால், பல உயிர்கள் காய்ப்பாற்றப்படும் அல்லவா! அதனால் தான் ரத்ததானம் செய்கிறேன். யாருக்காவது ரத்தம் வேண்டுமென்றால் என்னைக் கூப்பிடுங்க'' என்றார் குணசேகரன். ரத்ததானம் செய்யும் இப்படியான மனிதர்களால் தான் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn