திருச்சியில் வாடகை இ-பைக்

திருச்சியில் வாடகை இ-பைக்

உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு உதவியாகவும், காற்று மாசினை குறைக்க உதவும் வகையிலும், எலக்ட்ரிக் ஊக்கப்படுத்தும் முயற்சியாகவும் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் வாடகை இ-பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இருசக்கர வாகனம் மணிக்கு 50கி.மீ வேகம் செல்லக்கூடியது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 100கி.மீ தூரம் வரை பயணிக்கமுடியும்.

வாடகையை பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு ரூ.50, 12 மணி நேரத்திற்கு ரூ.500, நாள் ஒன்றுக்கு ரூ.700 மற்றும் 7 நாட்களுக்கு ரூ.3800 என்று பல தேர்வுகளை கொண்டுள்ளது. வாடகைக்கு எடுத்து செல்ல விரும்பவர்கள் ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு நகல், மற்றும் திரும்ப பெறக்கூடிய ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகை கொடுக்க வேண்டும். 100 சதவீதம் சார்ஜருடன் , ஓட்டுனருக்கு  தலைக்கவசம் வழங்கப்படும்.

ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான செலவுகள் ஓட்டுனரே ஏற்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் உள்ளன. இப்போது இந்தத்திட்டம் முதல் முறையாக திருச்சியில் அறிமுகமாகியுள்ளது. இது மக்களிடையே வரவேற்பை, பெற்றால் மட்டுமே பல இடங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn