பொது இடங்களில் பொதுமக்களுக்கு வாழ்த்து கூறினால் சட்டப்படி நடவடிக்கை - திருச்சி மாநகர காவல் ஆணையர் அதிரடி!

பொது இடங்களில் பொதுமக்களுக்கு வாழ்த்து கூறினால் சட்டப்படி நடவடிக்கை - திருச்சி மாநகர காவல் ஆணையர் அதிரடி!

2021-ஆம் வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2020-ஆம் தேதி இரவு திருச்சி மாநகரில் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க விரிவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு செய்யாமல் அமைதியான முறையில் புத்தாண்டினை கொண்டாடுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்

Advertisement

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு குடிபோதையில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் அமர்ந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் வாகனங்களை இயக்கி சட்டத்தை மீறும் வகையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது மக்களை கேலி செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என திருச்சி மாநகர காவல்துறை அறிவுறுத்துகிறது. 

Advertisement

மேலும் அவ்வாறு நடைபெறாமல் தடுக்க திருச்சி மாநகர காவல்துறை கீழ்கண்டவாறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

மாநகரில் அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் காவல் ரோந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல்துறையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மேற்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும் முக்கிய இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். திருச்சி மாநகரில்

உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கூடுதலாக காவல் ஆளினர்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள். குடிபோதையில் இருசக்கர வாகனங்கள் ஒட்டுபவர்கள், இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்பவர்கள், தலைகவசம் அணியாமல் செல்பவர்கள் மற்றும் அதிவேகமாக ஓட்டுபவர்கள் ஆகியோரை தடுக்க காவல் துறையினர் 50 குழுக்களாக பிரிந்து திருச்சி மாநகரம் முழுவதும் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். மேற்படி செய்கைகளில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

பொது இடங்களில் புத்தாண்டு வாழ்த்து கூறுவதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களை கேலி செய்தாலும், அவர்களுக்கு இடையூறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்திக்கொண்டு மது அருந்துதல், வெடி வெடித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO