பெண் வாரிசு என்பதால் கோவில் வரி வாங்க மறுத்தவர்கள் மீது ஐஜி-யிடம் புகார் அளித்த பெண்

பெண் வாரிசு என்பதால் கோவில் வரி வாங்க மறுத்தவர்கள்  மீது ஐஜி-யிடம் புகார் அளித்த பெண்

கரூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் திருமணதிற்கு பின் தன் தகப்பனார் ஊரில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருவதாகவும், ஊரில் கோவில் திருவிழாவின் போது தன் தகப்பனாருக்கு தான் பெண் வாரிசு என்பதால் தங்களிடம் வரிவசூல் செய்யாமல் ஒதுக்குவதாகவும், தங்களையும் ஊரில் ஒரு குடும்பமாக பாவித்து கோவில் வரி வாங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களிடம் புகார் மனு அளித்தார்.

பொதுவாக கிராமங்களில் ஊர் பொது கோவில்களில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது உள்ளூர் கிராம மக்களிடம் வரி வசூல் செய்யும் பழக்கம் நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் குடும்பத்தினர் தங்கள் பெண் வாரிசுகளை திருமணம் செய்து கொடுத்த பின்பு, அந்தப் பெண்கள் திருமணத்திற்கு பின்பு அதே கிராமத்தில் அவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வந்தால் அவர்களிடம் பாலின பாகுபாடு காட்டப்படுவதாகவும், திருவிழா சமயத்தில் அவர்களிடம் இருந்து வரிவசூல் செய்யப்படுவதில்லை என்றும் தெரிய வருகிறது.

ஆண், பெண் என பிறப்பின் அடிப்படையில் பாலின பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவது என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் அனைவரும் சமம் என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு கிராமத்தில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள் கோவில் திருவிழாக்களின் போது கிராமங்களில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். யாரையும் பெண் வாரிசுகள் என்ற காரணத்தின் அடிப்படையில் புறக்கணிக்கக்கூடாது என்று மத்திய மண்டல காவல்துறை தலைவர்கள்  அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் இது போன்ற பாலின பாகுபாடு சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்தால் தவறிழைக்கும் நபர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO