திருச்சி சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி - முதல் சுற்றில் 7 பேர் காயம்!!

திருச்சி சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி - முதல் சுற்றில் 7 பேர் காயம்!!

Advertisement

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் அடுத்து சூரியூரில் பொங்கலுக்கு அடுத்த நாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு திருச்சி மாவட்டம் சூரியூர், ஆவாரங்காடு பொத்தமேட்டுப்பட்டி இருங்களூர் ஆகிய நான்கு இடங்களிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டிருந்தனர். 

Advertisement

ஆனால் இந்த மாதத்தில் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி மட்டுமே கடந்த 15ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக சூரியூர் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டியினர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டியை தள்ளிவைப்பது என்றும், மாற்று ஏற்பாடாக வரும் இன்று நடத்துவது என்றும் முடிவெடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அனுமதி பெற்றனர்.

இந்த வருடம் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 550க்கும் மேற்பட்ட காளைகள் வரும் என்றும், 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வருவார்கள் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வாடிவாசலில் அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் மாடிபிடி வீரர்கள் 450 வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வாடிவாசலில்  களமிறங்குகின்றனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சூரியூரில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களும் வீரர்களும் மிகவும் வந்து கொண்டு இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக இப்போட்டியின் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட பின்பு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் விழா கமிட்டி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வரும் பொதுமக்கள் ஏதுவாக இரு புறமும், இரும்பு தடுப்புகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மிதிவண்டிகள், பீரோ, தங்க காசு, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்கள் ஒவ்வொரு மாடுகளை பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு வழங்கப்பட்டுகின்றன, அதேல் போல் அடங்காத காளையின் உரிமையாளர்களிடம் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இப்போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகின்றன.

மேலும் விபத்துகளை தடுப்பதற்காக 2 மருத்துவர்கள் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

ஜல்லிக்கட்டு முதல் சுற்று முடிவடைந்த நிலையில் 81 மாடுகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதுவரை மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.