குழந்தைகளை காக்கும் காக்கிகள் - ஐ.ஜி புதிய திட்டம்

குழந்தைகளை காக்கும் காக்கிகள் - ஐ.ஜி புதிய திட்டம்

மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு புதிய முயற்சியாக மத்திய மண்டல காவல்துறை தலைவர் அறிவுரையின்படி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகள் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 

அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பாதுகாவலராக செயல்பட விருப்பம் தெரிவிக்கும் ஒரு காவலரை நியமிக்கும் காக்கி கவசங்கள் ஒரு புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 865 குழந்தைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்யும் பணியை செய்வதற்கு விருப்பமுள்ள காவலர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது.

இதற்கு விருப்பம் தெரிவித்த 555 காவலர்களிடம் தலா ஒரு குழந்தையின் பாதுகாப்பை கண்காணிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியானது காவல் நிலையங்களில் பெண்கள் உதவி குழுவில் பணியாற்றும் காவலர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவலர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அந்த குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களின் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை உறுதிப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக கடந்த  28ம் தேதி அன்று கண்டெடுக்கப்பட்ட 865 குழந்தைகளுக்கும், காவலர்களால் நேரில் சந்திக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்கப்பட்டதுடன் மற்றும் குழந்தைகள் கல்வி தடையின்றி தொடர்வதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது ஒவ்வொரு குழந்தையின் பாதுகாப்புக்கென தனித்தனியே நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் பணியிட மாறுதலில் சென்றாலும் கூட அந்த குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான பணிகளை தொடர்ந்து கண்காணிப்பதுடன் வாரம் ஒருமுறை நேரில் சந்தித்து அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn