உறையூர் மீன்மார்க்கெட்டில் சமூக இடைவெளியை காற்றில்பறக்கவிட்டு குவிந்த பொதுமக்கள்

உறையூர் மீன்மார்க்கெட்டில் சமூக இடைவெளியை காற்றில்பறக்கவிட்டு குவிந்த பொதுமக்கள்
கொரோனா இரண்டாவது அலை பரவல் தற்போது அதிகரித்துவரும்நிலையில் 3தினங்களாக இரவுநேர ஊரடங்கும் அமலில் இருப்பதுடன், தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.அதன்படி நாளையதினம் முழுஊரடங்கு காரணமாகவும், ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் அசைவ உணவுகளை வாங்கி வைப்பதற்காக மீன் மற்றும் கறிக்கடைகளில் குவிந்தனர். 

திருச்சி உறையூர் மீன்மார்க்கெட்டில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மீன்களை குவிந்திருந்தனர். மீன்கள் தடைகாலமாக இருந்தாலும் விலை குறைவாக காணப்பட்டதால், மீன்களை வாங்கிச் செல்லமுண்டியடித்தபடி எவ்வித சமூக இடைவெளியினை பின்பற்றாமல், விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டபடி பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஊழியர்கள் முக்கவசம் அணிந்துவர வலியுறுத்தினர். நேற்றையதினம் திருச்சி மாவட்டத்தில் 320பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், இதுபோன்ற கூட்டம் அதிகரிப்பால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu