தேசிய தரவரிசைப் பட்டியலில் திருச்சி கல்லூரிகள்

தேசிய தரவரிசைப் பட்டியலில் திருச்சி கல்லூரிகள்

அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓட்டு மொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. இதில் தமிழக கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன.

அகில இந்திய அளவில் கல்லூரிகள் தரவரிசை பட்டியலில் திருச்சி ஜோசப் கல்லூரி 25வது இடமும், பிஷப் ஹீபர் கல்லூரி 34வது இடமும், ஹோலிகிராஸ் கல்லூரி 40வது இடமும், ஜமால் முகமது கல்லூரி 56வது இடமும், தேசிய கல்லூரி 90வது இடமும் பிடித்துள்ளன.

பல்கலைகழகங்கள் பிரிவில் தஞ்சை சாஸ்திரா பல்கலைகழகம் 26வது இடம் பிடித்துள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் 41வது இடம் பிடித்துள்ளது. நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகம் 83வது இடம் பிடித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn