திருச்சியில் யானைகள் பராமரிப்புகாக - தமிழக அரசு ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருச்சியில் யானைகள் பராமரிப்புகாக - தமிழக அரசு ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு

திருச்சி மாவட்டம் சிறுகனுரை அடுத்த எம்.ஆர் பாளையத்தில் செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் நீண்ட காலமாக இந்த மறுவாழ்வு மையத்தில் இருக்கக்கூடிய 6 யானைகளுக்கு தமிழக அரசு பராமரிப்புச் செலவுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் யானைகளுக்கான பச்சை தீவனங்கள் வழங்க 62,30,112 ரூபாயும் வழங்கபட உள்ளது.

யானைகளை பராமரிக்கும் பணியில்
ஈடுபடுத்தப்பட்டு உள்ள பணியாளர்களுக்கும், மற்ற இதர பராமரிப்புக்கும் 4,06,000ரூபாயும், யானைகளின் மருத்துவ செலவிற்கு 2,59,998ரூபாயும் என உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்கு தமிழக அரசானது நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

இந்நிலையில் 6 யானைகளுக்கு என மொத்தம் 98,27,610 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn