திருச்சியில் உள்ள ரயில் நிலையம் 5 கோடியில் புனரமைப்பு

திருச்சியில் உள்ள ரயில் நிலையம் 5 கோடியில் புனரமைப்பு

வடமாநிலங்களிலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் ரெயில்களை இணைக்கும் பிரதான வழித்தடமாக திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையம் உள்ளது. மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட இந்த ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மேலும் சில பயணிகள் ரெயில்களும் நின்று செல்கின்றது.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் மணப்பாறை ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மணப்பாறை ரெயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு புனரமைப்பு பணிக்காக சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரெயில்வே துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது. அதன்படி ரயில் நிலையம் மேற்கூரை புதுப்பித்தல், கழிவறை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர், மின்தூக்கி மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்வு தளம், பயணிகள் உள்ளே வருவதும், வெளியே செல்வதற்கும் தனி பாதையும்,

அலங்கார வளைவும், பயணிகள் காத்திருப்பு கூடம், ரெயில் பெட்டிகளை காட்டும் டிஜிட்டல் பதாகை, ரெயில்க ளின் வருகை குறித்த மின்னனு அறிவிப்பு பதாகை, வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மணப்பாறை ரெயில்நிலையத்தை தினமும் 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்கின்றது. ஆனால் குறிப்பிட்ட சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்லும் நிலை உள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணப்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision