அதிமுக ஸ்டார் வேட்பாளர்கள் உள்ளிட்ட 1026 பேர் ஒரே நாளில் வேட்புமனு

அதிமுக ஸ்டார் வேட்பாளர்கள் உள்ளிட்ட 1026 பேர் ஒரே நாளில் வேட்புமனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மிகவும் விறுவிறுப்பாக இன்று நடைபெற்றது .அதிமுக ,திமுக அமமுக, மக்கள் நீதி மய்யம்,பாஜக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் .அதிமுகவின் ஸ்டார் வேட்பாளர்கள் 20 வது வார்டில் போட்டியிடும் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேரு, 34 வது வார்டில் போட்டியிடும் அதிமுக முன்னாள் துணைமேயர் சீனிவாசன் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர்.   திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் இன்று மட்டும் ஆயிரத்து 1026 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். ஜனவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கலில் இன்றுவரை 1258 பேர்  தங்களுடைய வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn