கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திட அயோத்தி வரை நடைப்பயணம்

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திட அயோத்தி வரை நடைப்பயணம்

பாலமுருகன் என்பவர் அசாம் ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். மனித இனத்தைக் காக்க கோவிட் - 19 இரண்டாவது தடுப்பூசி அவசியம் மற்றும் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாத்து கல்வி வழங்கிட வேண்டும் என்றும், நோயினை வெல்ல நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து அவசியம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில்
இந்தியாவின் தென் பகுதியான இராமேஸ்வரம் பாம்பன் முதல் அயோத்தி நோக்கி 2,800 கி.மீ   நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த நடைபயணத்தில் இன்று திருச்சி வந்தடைந்தார். விழிப்புணர்வு நடைப்பயணத்தில், கொரோனா தொற்று அதிகமாய் இருந்த காலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது உதவிய அனைத்து நாட்டு பிரதமர்கள், முதல்வர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர்,

சமூக ஆர்வலர்கள், அனைத்து ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக 197 நாடுகளின் தேசியக்கொடிகளை சுமந்து  செல்கிறார். ராணுவ வீரரின் இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் வழியில் அவரை சந்திக்கும் அனைத்து மக்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn