3 வேளாண் சட்டம் ரத்து - திருச்சியில் விவசாய சங்கத்தினர் கொண்டாட்டம்

3 வேளாண் சட்டம் ரத்து - திருச்சியில் விவசாய சங்கத்தினர் கொண்டாட்டம்

3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற  உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 39 வது நாளாக நடைபெற்று வந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 

மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கரூர் பைபாஸ் ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கொண்டாடினர். அதே சமயத்தில் மத்திய அரசு வேளாண் விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தருவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், 

தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில்  தேங்கிநிற்கும் நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும், கன மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நிவாரணத் தொகை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn