திருச்சி அருகே பாம்பு கடித்து 3 வயது குழந்தை பலி!!

திருச்சி அருகே பாம்பு கடித்து 3 வயது குழந்தை பலி!!

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை - விராலிமலை சாலையில் உள்ள பாரதி நகர் சாலையோரத்தில் வசித்து வருபவர் கருப்பையா. இவருடைய மூன்று வயது குழந்தை ஹன்சிகாவுடன் சாலையோரங்களில் வசித்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சாலையோரம் தூங்கிக் கொண்டிருக்கும்போது 3 வயது குழந்தை ஹன்சிகாவை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக முதலுதவிக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது.

Advertisement

இதுகுறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.