முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள் நடைமுறைபடுத்த முடியாது என திமுக முதன்மை செயலாளர் கே.எ.நேரு பேட்டி
முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள் நடைமுறைபடுத்த முடியாது என திமுக முதன்மை செயலாளர் கே.எ.நேரு பேட்டி
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மத்திய வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய நேரு திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று பேசினார்.
டெல்டா மாவட்டங்களில் உள்ள 46 தொகுதிகளில் 40 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என திமுக தலைவரிடம் நம்பிக்கை தெரிவித்தாக குறிப்பிட்டார்.மற்ற மாவட்டங்களிலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் என பேசினார்.
ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளுக்கும் திமுகவினர் 7,000 பேர் இதுவரை விருப்ப மனு அளித்துள்ளதாக கே.என்.நேரு தெரிவித்தார்.
பின்னர் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
திமுக மாநாடு தேர்தல் அறிவித்தால் மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் திமுக தலைவருடன் பேசி மாநாடு போல் இல்லாமல் கூட்டம் நடைபெறுவதற்கு திட்டமிடப்படும். இன்று மாலை தோழமை கட்சிகளுடன் கூட்டம் நடைபெற உள்ளது திமுக தலைவர் கலந்து கொள்ள உள்ளார் .இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது திமுகவுக்கு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது .திறந்தவெளி மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தோம். கடந்த முறையும் இதே இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்ட போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது தலைவர்களுடைய அறிக்கைகள் தயாரிப்பதில் தாமதமானதால் மட்டுமே மாநாடு தேதி தள்ளிப்போனது.
தேதி அறிவிக்கப்பட்டதால் மாநாடு ஒத்திவைப்பு ஐபேக் நெருக்கடியால் மாநாடு ஏற்பாடுகள் தாமதமாகவில்லை.
ஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து சென்றது அவர்களுக்குத் தான் நஷ்டம் இரண்டு மிகப்பெரிய கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை.
முதல்வரின் அறிவிப்புகள் வாய் வார்த்தை அறிவிப்புகள்.
முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் பல சிக்கல்கள் உள்ளது. அடுத்து வரும் அரசு உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அதிமுகவின் கட்சிகளுக்கான கடன் தள்ளுபடி ஒரு விவசாயி கூட இதில் பலன் அடையவில்லை .மக்கள் நீதி மையத்தின் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பற்றி எனக்கு தெரியாது.
.திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கோவிட் தொற்றால் தேர்தல் விதிமுறைகள் கட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கடந்தமுறை விதிமுறைகள் விதிக்கப்பட்டது அதையும் தாண்டி பணம் எடுத்துச் சென்றார்கள். பணம் கொடுத்தார்கள் .தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை பார்ப்போம் .போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையை தொழிலாளர்களை அழைத்துப் பேசி உரிய முறையில் தீர்வு காண வேண்டும்.
முன்னதாக நடைபெற்ற செயற்கு குழு கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் ஸ்டாலின் குமார் மாநகர செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி பரணிகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம்குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் சேர்மன் துரைராஜ் பழனியாண்டி கருணைராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்