சமயபுரம் மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடைகள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை, சீருடைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (13.01.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மன்னச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சீ.செல்வராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.இராஜேந்திரன், உதவி ஆணையர்கள் மோகன சுந்தரம், ஞானசேகரன்

மாவட்டப் பிரமுகர் வைரமணி, முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் வி.எஸ்‌.பி.இளங்கோவன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் செந்தில் குமார் ஆகியோர் உள்பட பலர் உள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn