வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது - திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது - திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

Advertisement

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கட்கிழயைன்று நடைபெறும் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட தேர்தல் அதிகாரி சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பை இன்று அறிவித்துள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் இன்று பிற்பகல் முதலே அமுலுக்கு வந்துள்ளது. எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாரந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கட்கிழமையன்று நடைபெறும் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இனி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது. 

Advertisement

அதேபோல மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம்கள், சிறப்பு மனுநீதி நாள் முகாம் போன்ற கூட்டங்களும் நடைபெறாது. இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் இடலாம். அம்மனுக்கள் பிரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். எனவே, குறைகளை தெரிவிக்க விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் அம்மனுவினை இடலாம் என்றும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை நல்கிடுமாறும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சு.சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.