பொதுமக்களுக்கு இடையூறு வாகனங்களில் பொறுத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன் அகற்றம்

பொதுமக்களுக்கு இடையூறு வாகனங்களில் பொறுத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன் அகற்றம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் 
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாத்து, ரோந்து பணி செய்யவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்கள்.


திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி மாநகரத்தில் விதியை மீறி காற்று ஒலிப்பான் பொறுத்தப்பட்ட வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில் போக்குவரத்து விதியை மீறி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் காற்று ஒலிப்பான் பொறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போக்குவரத்து காவல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் கண்டறிந்து, 

விதியை மீறி காற்று ஒலிப்பான் (AIR HORN) பயன்படுத்திய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கு போக்குவரத்து மண்டலத்தில் 30 பேருந்துகளிலிருந்தும், தெற்கு போக்குவரத்து மண்டலத்தில் 20 
பேருந்துகளிலிருந்தும் கண்டறிய்ப்பட்ட 50 கனரக வாகனங்களில் காற்று ஒலிப்பான் 
முற்றிலுமாக அகற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது. 

மேலும் போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் 
வகையில் இயக்கப்படும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையாக எச்சரித்துள்ளார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn