திருச்சியில்  8 பள்ளி மாணவர்களுக்கு கோவிட்   தொற்று-  3 நாட்கள் பள்ளி, விடுதிக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

திருச்சியில்  8 பள்ளி மாணவர்களுக்கு கோவிட்   தொற்று-  3 நாட்கள் பள்ளி, விடுதிக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

சமயபுரம் பகுதியில் உள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேனிலைப்பள்ளி  7  மாணவர்களுக்கு பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தனியார் பள்ளியில்  பயிலும் ப்ளஸ் 2 மாணவ மாணவிகள் 600 பேருக்கு சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவர்  மதிவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள் ( பிசிஆர் ) கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

 கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான பள்ளி மற்றும் அனைத்து விடுதிகளைகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய இன்று முதல் 20,21,22 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளி, விடுதிக்கும் விடுமுறை அறிவிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டார்.

7 மாணவர்களில் 4 மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாணவருக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த 3 மாணவருக்கும் கோவிட் தொட்டு உறுதியாகி உள்ளது.மாணவர்கள் அனைவரும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

மேலும் திருச்சி சீராத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில் அங்கும் சுகாதார பணியாளர்கள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கோவிட் பரிசோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனை செய்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul 

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn