திருச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மூன்று மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

திருச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மூன்று மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தேர்வுகளும் நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அரசு தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் திருச்சி சமயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றொருவர் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்.

இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை நடத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். மேலும் திருச்சி சீராத்தோப்பு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த ஏழாம் வகுப்பு மாணவிக்கும் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக அவருக்கு காய்ச்சல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  சுகாதாரத் துறை பணியாளர்கள் பள்ளியில் ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

அந்த வகுப்பறை தற்பொழுது மூடி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து சிறு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கொரோனா தலைதூக்குகிறதா என்ற எண்ணம் அனைவரும் மனதில் எழ துவங்கியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn