இறப்பிலும் இணைப் பிரியாத கணவன் - மனைவி, தந்தை - மகன் திருச்சியில் சோகம்
திருச்சி பாலக்கரை இரட்டைப் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஏ. கிருஷ்ணன் (91). இவரது மனைவி சம்பூரணத்தம்மாள் (86). இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். வயதான தம்பதியில் கணவர் கிருஷ்ணன் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரிலுள்ள மகன் வீட்டிலும், சம்பூரணத்தம்மாள் திருச்சி காட்டூரில் உள்ள மற்றொரு மகன் வீட்டிலும் இருந்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (25.11.2022) சம்பூரணத்தம்மாள் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் உள்ள வீட்டில் வைப்பதற்காக, குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர். சம்பூரணத்தம்மாள் உடலை ஆம்புலன்ஸ் ஏற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தபோது, மண்ணச்சநல்லூர் பூமிநாத நகரில் வீட்டிலிருந்த கிருஷ்ணனும் காலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ணன், சம்பூரணத்தம்மாள் உடல்கள் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த உறவினர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மனைவி இறந்த சிறிது நேரத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று திருச்சி பொன்னகர் பகுதி சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ஒரே மகன் ஷயாம்பாலாஜி (21), டிப்ளமோ படித்துள்ள இவர், திருச்சி திண்டுக்கல் சாலையில் சாலையோர டிபன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த கடந்த (19.11.2022)ஆம் தேதி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்பு மீதி மோதி விபத்துக்குள்ளானார்.
பின்னர் மூன்று நாட்கள் தொடர் சிகிச்சை இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த (22.11.2022) மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தனது ஒரே மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த செந்தில்குமார், நேற்று (25.11.2022) மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதில் தனது மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தந்தையும், உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO