பொதுமக்களின் தாகம் தீர்க்கும் திருச்சி மாநகர காவல்துறை

பொதுமக்களின் தாகம் தீர்க்கும் திருச்சி மாநகர காவல்துறை

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டு வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் கோடை வெயிலில் சென்று வருவதால் உடலில் நீர் வற்றுதல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்க மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறித்தினார்.

இதன் ஒருபகுதியாக திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் முன்பு பொதுமக்களுக்கு வசதியாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மோருடன் மாங்காய், வெள்ளிக்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. அமர்வு நீதிமன்ற காவல் ஆய்வாளர் சேரன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் சக காவலர்கள் ஏற்பட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தாகத்தை தணித்து வருகின்றனர்.

https://youtu.be/ZJPUnp5TT98

ஏற்கனவே திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கண்டோன்மெண்ட் போக்குவரத்து போலீசார் மற்றும் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO