காவல்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்ட திருநங்கைகள்

காவல்துறையுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்ட திருநங்கைகள்

திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதியும், அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில் திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்பட்ட ஏப்ரல் - 15ம் தேதியை திருநங்கையர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட தமிழக அரசு 2011ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் உத்தரவிடப்பட்டு திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகமே எதிர்த்து நின்றாலும், வாழ்ந்து காட்டுவதே பெரும் சாதனை என வைராக்கியமாக சாதித்துக் காட்டிவரும் திருநங்கைகளை கௌரவிக்கும் விதமாகவும், திருநங்கைகள் பற்றிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கண்டன்மெண்ட் சரக காவல் உதவி ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற திருநங்கைகள் தின விழா நடைபெற்றது.

இதில் காவலராக தேர்வாகி பயிற்சி பெற்று வரும் திருநங்கை ரெஹானா பானு, பரதநாட்டியக் கலைஞர் அனிஷா, திருநங்கை விவசாயி பூமிகா, இயற்கை உரம் தயாரிப்பாளரான திருநங்கை சத்தியா உள்ளிட்ட பல்வேறு தலைசிறந்த உழைப்பாளி திருநங்கைகளை அனைத்து மாநகர கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் சால்வை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து திருநங்கைகள் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நட்டும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO