பொன்மலை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரால் மக்கள் அவதி - நிரந்தர தீர்வு காண கோரிக்கை
திருச்சி பொன்மலைப் பணிமனைக்கு பின்புறம் வடக்கு கேட் வழியாக செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் போதே பணிகளில் சற்று குறைபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெளியே தேங்கும் மழைநீர் சுரங்கப் பாதையின் நுழை வாயில்கள் வழியாகவும், குழாய் தண்ணீர் வருவது போல பக்கவாட்டு கான்கிரீட் சுவர்களில் உள்ள ஒட்டைகள் வழியாகவும் உள்ளே வருகிறது.
இதனால் பொதுமக்கள் பாதையைக் கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.இதனால் பணிமனைக்கு வரும் ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமின்றி, பள்ளி குழந்தை, ரயில்வே ஆஸ்பத்திரி வருவர்கள் மற்றும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர். மஞ்சத்திடல் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நிற்காது என்பதால், அப்பகுதியினர் பொன்மலை ரயில்வே நிலையத்துக்குச் செல்வதற்கு இப்பாதை தான் பயன்பாட்டில் உள்ளது.
மேலும் மஞ்சத்திடல் கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஆஸ்பத்திரியிற்கு வேன் போக கஷ்டமாக இருப்பதாலும் இந்த சுரங்கப்பாதை தான் பயன்படுத்த வேண்டும் என்பதாலும், மழை நீர் மற்றும் ஊற்று நீர் முலம் தேங்கும் நீரை அகற்ற வேண்டும் எனவும், நீர் தேங்காமல் விபத்து ஏற்பாடும் முன் நிரந்திர தீர்வு காண வேண்டும் எனவும் ரயில்வே தொழிலாளர்கள் , பொன்மலை , அம்பிகாபுரம், அரியமங்கலம் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn