வெள்ளக்காடான கல்லூரிக்கு 05.12.2021 வரை விடுமுறை - மாநகராட்சி மீது கல்லூரி நிர்வாகம் புகார்

வெள்ளக்காடான கல்லூரிக்கு 05.12.2021 வரை விடுமுறை - மாநகராட்சி மீது கல்லூரி நிர்வாகம் புகார்

வருகிற 29ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவிலிருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் மேலும் எடமலைப்பட்டிபுதூர் கொல்லாங்குளம் முழுவதும் நிரம்பியதால் மழைநீர் வடிகால் வழியாக கல்லூரி முன்பு சாலை வழியாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் அங்கு உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வடிகால் வழியாக வரும் மழை நீர் சாலையில் ஆறு போல பாதசாரிகள் மற்றும் போக்குவரத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அலட்சியத்தால் திருச்சி தேசிய கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் 15 நாட்களுக்கு கல்லூரி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் சார்பில் மாநகராட்சிக்கு இடம் கொடுத்த நிலையிலும், அந்த இடங்களை தனியார் ஆக்கிரமித்ததால் கல்லூரி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடானது. இதுகுறித்து மாநகராட்சியிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கல்லூரி நிர்வாகத்தினர் புகார் கூறி, தற்போது 15 நாள் விடுமுறை அளித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn