முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்

முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியில் மக்கள் பயன்பாட்டிற்கு முடிவுற்ற திட்டங்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

கிழக்குறிச்சி 9 இலட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் உயிர் உய்யகெண்டான் ஆற்றின் குறுக்கே இரண்டு பாலங்கள் மற்றும் சாலை ரூபாய் 2 கோடி மதிப்பில் சோழமாதேவி சின்டெக்ஸ் நீர்த்தேக்க தொட்டி ரூபாய் மூன்று லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பூலாங்குடி காலனிபகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூபாய் 28 லட்சம் நிதியில் நீர் தேக்க தொட்டி திறப்பு.

காந்தளூர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ரூபாய் 21 லட்சம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திறப்பு பெரிய சூரியூரில் சின்டெக்ஸ் நீர்த்தேக்க தொட்டி ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் திறப்பு. குண்டூர் பர்மா காலனி ரூபாய் 12.30 லட்சம்மதிப்பில் ரேஷன் கடை திறப்பு. குண்டூர் அய்யம்பட்டியில் ரூபாய் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்புதுப்பிக்கப்பட்ட படித்துறை திறப்பு.

நவல்பட்டு காவேரி நகர் பகுதியில் அங்கன்வாடி (m.g.n.r.e.s ) 2023 - 2024 ஆம் ஆண்டு நிதியிலிருந்து ரூபாய் 11.97 லட்சம் மதிப்பில் திறப்பு மேற்குறிப்பிட்ட பணிகளை இன்று தனது தொகுதி மக்களின் பயன்பாட்டிற்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பொய்யாமொழி அர்ப்பணித்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன், ஒன்றிய குழு தலைவர் சத்யாகோவிந்தராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் சண்முகம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision