திருச்சியில் விநாயகர் சிலை திருட முயற்சி

திருச்சியில் விநாயகர் சிலை திருட முயற்சி

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கல்லுக்குடியில் அமைந்துள்ள ஆயிரம் கண்ணுடையாள் மாரியம்மன் கோவில் அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையில் அமைந்துள்ள சர்ப்ப விநாயகரை கிராம மக்கள் வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று கோவில் கதவு திறந்து இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் பீடத்தில் இருந்து விநாயகர் சிலையை திருட முயற்சி செய்தனர். அப்போது இதனை கண்ட அப்பகுதி மக்கள் சத்தத்தை கேட்டு மூன்று இளைஞர்களும் விநாயகர் சிலையை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனைத் தொடர்ந்து கல்லுக்குடி கிராம மக்கள் பொதுமக்கள்  சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision