திருச்சியில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - 92பேர் பாதிப்பு ஆட்சியர் பேட்டி.

திருச்சியில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - 92பேர் பாதிப்பு  ஆட்சியர்  பேட்டி.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான திருச்சி கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அவர்கள் துவக்கி வைத்தார், தொடர்ந்து விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சேலை மற்றும் ஆயத்த ஆடை ரகங்களையும் அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்....திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021ல் ரூ.143.7 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2022க்கு ரூ.300.00 இலட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11 வது மற்றும் 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தெடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர்....கோவிட் தொற்று திருச்சியில் சற்று அதிகரித்து வருகிறது. 5 முதல் 6 பேர் வரை பாதிக்கப்பட்டநிலை மாறி கடந்த 1 வார காலமாக 18 பேர் வரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். டெங்கு காய்ச்சல் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது டெங்குவும் அதிகரித்துள்ளது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஆங்காங்கே தேங்ககூடிய மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும், பிளாஸ்டிக் குப்பைகளில் தண்ணீர் தேங்காமல் அப்புறப்படுத்தும் பட்சத்தில் டெங்குவை ஒழிக்க முடியும்.

பன்றி காய்ச்சல் நோயினால் இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டு, 9பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 - 4 நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில் உள்ளார்கள். பொதுமக்கள் அச்சப்படும் வகையில் பாதிப்பு இல்லை. திருச்சியில் நேற்று இரவு அதிகளவு கனமழை பதிவாகி உள்ளது, மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, தண்ணீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பேரிக்காடு அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவே, மேலாளர் (இரகம் மற்றும் பகிர்மானம்) M.அன்பழகன் அவர்கள், அர அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழா ஏற்பாடுகளை திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் A.சங்கர் சிறப்பாக செய்திருந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO