125 ஆண்டுகால கம்பீரம், விடுதலை போராட்ட வீரர் டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளி
125 ஆண்டுகளுக்கு(16.06.1897) முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் சித்திரை வீதியில், வெள்ளைக் கோபுரம் முன்பாக தேர் நிற்கும் இடத்திற்கு அருகில் டாக்டர் இராஜன் என்ற விடுதலைப் போராட்ட வீரரின் இடத்தில் அவர் பெயரால் ஒரு அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இன்று இருபாலர் நடுநிலைப் பள்ளியாக 125 ம் ஆண்டில் காலடி வைத்து கடந்து செல்கிறது டாக்டர் இராஜன் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஸ்ரீரங்கம்.
மாணவர்களுக்கு திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் சுவாமி மெய்யழகன் சர்க்கரை பொங்கல் வழங்கி கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இன்றும் 600 மாணவர்களுடன் ஆறு மெய்நிகர் வகுப்பறைகளுடன் அனைத்து வகுப்பறைகளும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அரசுப்பள்ளியாக வெற்றி நடைபோடுகிறது.
சிவக்குமார் முதல்வர், ஓய்வு DIET காஞ்சிபுரம் அவர்களால் மாணவர்களுக்கு நாட் குறிப்பு வழங்கப்பட்டது. கி.ஆ.பெ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) இராஜேந்திரன், டாக்டர் ராஜன் அவர்களின் வரலாறு புத்தகத்தை மாணவர்களுக்கு வழங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் மருத நாயகம்,தலைமை ஆசிரியர் லில்லி புளோரா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO