பொன்னியின் செல்வன் திரைப்படம்  கல்கியின் பொன்னியின் செல்வனா - திருச்சியில் உண்மையை உடைத்த நடிகர் பார்த்திபன்

பொன்னியின் செல்வன் திரைப்படம்  கல்கியின் பொன்னியின் செல்வனா  - திருச்சியில் உண்மையை உடைத்த நடிகர் பார்த்திபன்
திருச்சியில் மூர்த்திஸ் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இது திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி என்ற பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காரில் அமர்ந்து கொண்டு திரைப்படங்களை காண முடியும். இதற்காக 80*50 சதுர அடியில் மிகப்பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆறு மாநிலங்களில் இது போன்ற திறந்தவெளி திரையரங்கு உள்ளது.

இதில் குறிப்பாக தற்பொழுது புதிதாக திருச்சி மாவட்டத்தில்  திறக்கப்பட்டுள்ளது. மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் 100 கார்களை நிறுத்தலாம். மேலும் கூடுதலாக 100 இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் திரைப்படத்தை காண முடியும். குறிப்பாக நாள் ஒன்றுக்கு இரவு 6 மணி முதல் 9 மணி வரை ஒரு காட்சியும், 10 மணி முதல் 12 மணி வரை மற்றொரு காட்சி என இரண்டு காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த புதிய திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன்..... தமிழ் திரைப்படம் என்றாலே பொன்னியின் செல்வன் தமிழ் திரையரங்கில் பாராட்டப்படக்கூடிய திரைப்படமாக இது உள்ளது.  பெண்கள்  பெரிய புத்திசாலிகள் என பேசினார்.

பின்னர் அங்குள்ள பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்..... பார்த்திபனின் கனவு என்ன? உலகத்தில் முதல் படம் தயாரிக்கும் அளவிற்கு என்னுடைய கனவுகள் விரிந்து கொண்டு இருக்கிறது. நான் அடுத்ததாக ஜாலியாக, கமர்சியலாக ஒரு திரைப்படம் எடுக்க உள்ளேன் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கும் பொழுது நானும் ஒரு நாள் திரைப்படத்தின் நடிப்பேன் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன்.

தற்பொழுது வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்தின்தினுடைய பொன்னின் செல்வனாக தான் உள்ளது. கல்கியினுடைய பொன்னியின் செல்வனாக இருக்க வாய்ப்பில்லை. இயக்குனர் எதை சொல்லிக் கொடுக்கிறாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன். காதல் அதிகமாக இருப்பதினால் தான் நான் இளமையாக இருக்கிறேன். மேலும் அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் நடிகர் பார்த்திபனை பார்த்து ஐ லவ் யூ என்று கூற அவர் கூறியதில் சந்தோஷமும் வருத்தமும் இருக்கிறது ஒரு ஆண் கூறியதால் வருத்தம் இருக்கிறது என்றார். ஆனால் யாராவது கூறுகிறார்களே என்கின்ற சந்தோசம் இருக்கிறது என தெரிவித்தார்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் பேசிய தமிழ் போன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பேசுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குனர் விருப்பத்திற்கு  ஏற்ப சுத்த தமிழிலில் அல்ல கலோகியலாக பேசி உள்ளேன். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படக் கதையை இயக்குனர் செல்வராகவன் கூறுகையில் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் பொன்னியின் செல்வனுக்கு ஒரு ஆதாரம் உள்ளது. எழுத்தாளர் கல்கி எழுதியிருக்கிறார் புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அப்படி இல்லை அது ஒரு காட்டாறு, இயக்குனர் செல்வராகவனுடைய படைப்பு.

ராஜராஜசோழன்  கதாபாத்திரத்தில் நடித்தவர் என்றாலே நடிகர் திலகம் கணேசன் தான் அவரைப் போன்ற நடிக்க முயற்சி செய்வது மிகப்பெரிய தவறு. அரசர்  கதாபாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் நடிக்க கூடாது என்று முடிவு செய்தேன். முயற்சி செய்தால் வராது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 12 வருடங்களுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் பெயரை கூறும் போது ரசிகர்களுடைய கட்டுக்கடங்காத உற்சாகம். 12 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்திற்கு பாராட்ட பெறுவது மகிழ்ச்சியான விஷயம். உழைப்பு என்றும் வீண் போகாது அதுபோலத்தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமாக உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் உடைய வசூல் தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் இதற்காக ஆயிரத்தில் ஒருவனை போல் நன்றி சொல்ல காலம் தாழ்த்தக்கூடாது என தெரிவித்தார். இங்கு திரைப்படத்தை காண வருபவர்கள் ஒருவருக்கு 200 ரூபாய் (சிறியவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் )கார் ஒன்றுக்கு 150 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் வருவார்கள் 50 ரூபாய் இரு சக்கர வாகனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும். 100 பேர் இருக்கையில் அமர்ந்தும் படம் பார்க்க முடியும். தேவையான உணவுகள், தின்பண்டங்கள் ஆன்லைன் மூலமாகவும் அங்கு உள்ள உணவகத்திலும் ஆர்டர் செய்தால் காருக்கு கொண்டு வந்து தரும் வசதியும் ஏற்படுத்தி உள்ளதாக மூர்த்தீஸ் திரையரங்கு உரிமையாளர் மருத்துவர் ஹரிஷ் குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO