திருச்சியில் நூடுல்ஸ் தயாரிப்பு 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக 7 நூடுல்ஸ் தயாரிப்பு கம்பெனிகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அலுவலர்கள் கொண்ட குழுவால் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் இரண்டு நூடுல்ஸ் தயாரிப்பு கம்பெனிகள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்ததினால் அந்த இரண்டு கம்பெனிகளின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 பிரிவின் 55 கீழ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில்... திருச்சி மாவட்டத்தில் உள்ள நூடுல்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் உணவுப்பொருள் தயார் செய்யும் அனைவரும் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்றும், ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் விற்பனை வணிக இடம் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இப்ராஹிம், வசந்தன், ஸ்டாலின், அன்புச்செல்வன், ரங்கநாதன், வடிவேல், சண்முகசுந்தரம், பொன்ராஜ், பாண்டி, செல்வராஜ் மற்றும் மகாதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO